Post Office Scheme : வட்டி மட்டுமே ரூ.29,776.. இந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
Post Office Term Deposit Scheme | தபால் நிலையங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் டெர்ம் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்து ரூ.29,776 வட்டியாக பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய நினைக்கும் பெரும்பாலான நடுத்தர மக்களின் முதன்மை தேர்வாக இருப்பது தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் (Post Office Saving Schemes) தான். காரணம், இந்த தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை தருகின்றன. இதன் காரணமாகவே பலரும் இதனை தேர்வு செய்கின்றனர். தபால் நிலையங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு வட்டியாக மட்டுமே ரூ.29,779 கொடுக்கும் சிறப்பு திட்டம் ஒன்று உள்ளது. அது என்ன திட்டம், அதில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தபால் நிலைய டெர்ம் டெபாசிட் திட்டம் – இத்தனை சிறப்பு அம்சங்களா?
பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தபால் நிலைய டெர்ம் டெபாசிட் திட்டம் (Term Deposit Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும். காரணம் இந்த திட்டம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் நிலையான வைப்பு நிதி திட்டத்தை போன்ற அம்சங்களை கொண்டுள்ள நிலையில், இதற்கான நிலையான வட்டி மற்றும் வருமானம் கிடைக்கும். இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளனதன் காரணமாக இந்த திட்டம் பலருக்கும் மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது.
இதையும் படிங்க : ரூ.10 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும் அஞ்சலக திட்டம்.. இத்தனை சிறப்பு அம்சங்களா?




முதலீடு மற்றும் வருமானம்
இந்த தபால் நிலைய டெர்ம் டெபாசிட் திட்டத்தில் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் என எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டங்களுக்கு 6.9 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதில் 2 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த 2 ஆண்டுகளுக்கான திட்டத்தை தேர்வு செய்து முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் நீங்கள் ரூ.2 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் திட்டத்தின் முடிவில் உங்களுக்கு மொத்தமாக ரூ.2,29,776 கிடைக்கும். அதாவது நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கான வட்டி ரூ.29,776 ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.2,29,776 கிடைக்கும்.
இதையும் படிங்க : தீபாவளிக்கு அறிமுகமாகும் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி? வெளியான ஹேப்பி நியூஸ்!
குறுகிய காலத்தில் முதலீடு செய்து பயன்பெற வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.