Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ITR Filing : கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாமா?.. வல்லுநர்கள் கூறுவது என்ன?

Pay Income Tax with Credit Card | 2024 - 2025 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கி வருகிறது. இந்த நிலையில், வரி செலுத்தும் நபர்கள் அவசர அவசரமாக வரி தாக்கல் செய்து வருகின்றனர்.

ITR Filing : கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாமா?.. வல்லுநர்கள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Sep 2025 15:15 PM IST

வருமான வரி தாக்கல் (Income Tax Filing) செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. இதன் காரணமாக வரி செலுத்தும் நபர்கள் அவசர அவசரமாக வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர். சிலருக்கு பண பற்றாக்குறை இருப்பதன் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில், வரி செலுத்தும் நபர்கள் நிதி சிக்கலை சமாளிக்க கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உண்மையிலே கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாமா, அதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 கடைசி தேதி

2024- 2025 நிதியாண்டுக்கான மற்றும் 2025- 2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 15, 2025 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒருவேளை இந்த தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் கூடுதல் கட்டணத்துடன் வரி தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதுமட்டுமன்றி, வருமான வரித்துறை சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் பலரும் அவசர அவசரமாக வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : மாத சம்பளம் சட்டுனு கரையுதா? 50-30-20 ஃபார்முலா இனி ஃபாலோ பண்ணுங்க!

கிரெடிட் கார்டு மூலம் வருமான வரி தாக்கல் செய்யலாமா?

ஒரு ஆண்டுக்கான மொத்த வருமான வரியை ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என்பது பலருக்கும் சிரமமாக இருக்கும். இதன் காரணமாக சிலர் காத்திருந்து அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்வர். இந்த நிலையில் தான் கிரெடிட் கார்டு மிகப்பெரிய உதவியாக உள்ளது. அதாவது, கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். கிரெடிட் கார்டு மட்டுமன்றி யுபிஐ (UPI – Unified Payment Interface), நெட் பேங்கிங் (Net Banking), டெபிட் கார்டு (Debit Card) ஆகியவற்றை பயன்படுத்தியும் வருமான வரி தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கடன் நிராகரிப்பு உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்குமா? உண்மை என்ன?

கிரெடிட் கார்டு 45 நாட்கள் பில் சுழற்சியை கொண்டது. இதன் காரணமாக 45 நாட்களுக்கு ஒருமுறை கடனை திருப்பி செலுத்தினால் போதும். இதுதவிர அதில் மாத தவணை முறையும் உள்ளது. எனவே நிதி சிக்கல்களை சமாளித்து வருமான வரி செலுத்த கிரெடிட் கார்டு சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.