Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கடன் நிராகரிப்பு உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்குமா? உண்மை என்ன?

Financial Tips: நம் கடன் பெற விண்ணப்பிக்கும்போது சில காரணங்களால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அவற்றை நிராகரிக்க வாய்ப்புண்டு. அப்படி நிராகரிக்கப்படும்போது நமது கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கடன் நிராகரிப்பு உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்குமா? உண்மை என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Sep 2025 16:31 PM IST

பொதுவாக லோனுக்கு விண்ணப்பிக்கும் போது சில காரணங்களால் வங்கிகள் (Bank) மற்றும் நிதி நிறுவனங்களால் நிராகரிக்கப்படலாம். இதனால் நம் சிபில் ஸ்கோர் (Cibil Score) பாதிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆனால் பொதுவாக கடன் நிராகரிக்கப்படுவது நேரடியாக கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தாது. கடனுக்கு விண்ணப்பிக்கும்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்ள் இணைந்து நமது கிரெடிட் ஸ்கோரில் ஹார்டு இன்கொயரி (Hard Enquiry) என்ற சோதனையை நடத்துகின்றன. இந்த சோதனையின்போது நமது கிரெடிட் ஸ்கோர் சிறிய அளவில் தற்காலிகமாக குறையலாம்.

இதனை வைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் கிரெடிட் பியூரோக்களுக்கு அப்டேட் செய்யமாட்டார்கள் என்பதால், அது கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதாவது நம் கடன் விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும், அது நேரடியாக கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தாது.

பல முறை கடன் பெற விண்ணப்பித்தால் ஏற்படும் விளைவுகள்

ஆனால் இதில் சில சிக்கல்களும் இருக்கிறது. ஒருமுறை கடன் நிராகரிக்கப்பட்டால் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் குறுகிய காலத்துக்குள் பல முறை கடன் விண்ணப்பித்து பல ஹார்டு இன்கொயரிகளை சந்தித்தால், கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் கடன் பெற விண்ணப்பிப்பவர்களின் நம்பகத்தன்மை குறையும்.

இதையும் படிக்க : சிபில் ஸ்கோர் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் கடன் வரலாற்றை பார்த்து முடிவு செய்கின்றன. ஆனால் கிரெடிட் ரிப்போர்ட் சரியான நேரத்தில் அப்டேட் செய்யப்படவில்லை என்றால் கடனை திருப்பி செலுத்திய தகவல்கள் தெரியாமல், பழைய தகவல்களை வைத்து கடன் நிராகரிக்கப்படலாம். இதை சரிசெய்ய ரிசர்வ் பேங்க் இந்த ஆண்டு 15 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் பியூரோக்கள் மற்றும் வங்கிள் அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

முதன்முறை கடன் பெற விண்ணப்பிப்பவர்களு நன்மை

முதன்முறையாக கடன் பெற விண்ணப்பிப்பவர்கள் கிரெடிட் வரலாறு இல்லாத காரணத்தால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நிராகரிக்க முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கிரெடிட் ஸ்கோர் மட்டுமல்லாமல் வேறு காரணிகளையும் மதிப்பீடு செய்து கடனை வழங்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. இது புதிதாக கடன் பெறுபவர்கள் இனி எளிமையாக கடன் பெறலாம்.

இதையும் படிக்க : பெர்சனல் லோனுக்காக அளிக்கும் தகவல்களை வைத்து நடக்கும் மோசடி – தவிர்ப்பது எப்படி?

கடன் பெற விண்ணப்பிப்பவர்கள்  தெரிந்துகொள்ள வேண்டியவை

  • உங்கள் கிரெடிட் ஸ்கோரை பார்ப்பது கிரெடிட் ஸ்கோருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
  • உங்கள் கடன் நிராகரிப்பதற்கான காரணத்தை தெரிந்துகொண்டு அதனை உடனடியாக சரி செய்ய முயற்சிப்பது நல்லது.
  • உங்கள் கடனை சரியாக செலுத்தி வரும்போது உங்கள் கிரெடிட் ஸ்கோர் தானாகவே மேம்படும்.
  • உங்கள் கடன் விண்ணப்பத்தை நிராகரிப்பது நேரடியாக கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தாது.