Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெர்சனல் லோனுக்காக அளிக்கும் தகவல்களை வைத்து நடக்கும் மோசடி – தவிர்ப்பது எப்படி?

Loan Safety Alert : இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடன் பெறுவது மிகவும் எளிதாகிவிட்டது. தற்போது தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் செயலிகள் உடனடி பெர்சனல் லோன் வழங்குகின்றன. அப்படி லோனுக்காக நாம் அளிக்கும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்துகள் இருக்கிறது.

பெர்சனல் லோனுக்காக அளிக்கும் தகவல்களை வைத்து நடக்கும் மோசடி – தவிர்ப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Aug 2025 16:17 PM

ஒரு காலத்தில் கடன் வாங்குவது என்பது மோசமான செயலாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வீட்டுக்கு மிக்சி, கிரைண்டர் வாங்குவது என்றால் கூட இஎம்ஐ முறையில் தான் வாங்குகிறோம். வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களுக்கு கிரெடிட் கார்டுகளைத் (Credit Card) தான் பயன்படுத்துகிறோம். மேலும் அவசர தேவைகளுக்கு கடன் வாங்குவது என்பது தற்போது இயல்பாகிவிட்டது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மூலம் பெர்சனல் லோன் பெறுவது மிக எளிமையாகி விட்டது. ஆனால் அதே நேரத்தில், உங்கள் பான் கார்டு விவரங்கள், பேங்க் ஸ்டேட்மென்ட், மொபைல் எண், இமெயில்  ஐடி போன்ற மிக முக்கிய தகவல்களை பகிர வேண்டிய சூழ்நிலை வருகிறது. சரியான பாதுகாப்பு இல்லையென்றால், இந்த தகவல்கள் ஹேக்கர்களின் கையில் சிக்கி மோசடிக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. இதனை எப்படி தடுப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் தகவலை எப்படி கையாளுகின்றன?

பிரபல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பெர்சனல் லோனுக்காக நீங்கள் அளிக்கும் தகவல்களை என்கிரிப்ஷன் (Encryption) தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பாக சேமிக்கின்றன. இவற்றில் ரகசியத்தன்மை கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாத, அடையாளம் தெரியாத கடன் செயலிகள் மற்றும் இணையதளங்களில் இத்தகைய பாதுகாப்பு உங்களுக்கு கிடைக்காது. அங்கே உங்கள் தகவல்கள் தவறாக பயன்படுத்தும் அபாயம் அதிகம்.

இதையும் படிக்க : கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கடன் வாங்குவதில் சிக்கலா? இந்த எளிய வழிகளை டிரை பண்ணுங்க!

அவசர தேவைகளுக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக போலியான தளங்களில் நம் தகவல்களைப் பகிர்ந்தால், ஹேக்கர்கள் உங்கள் தகவல்களை திருடி, உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடவோ, ஹேக் செய்யவோ பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற இணையதளங்கள் பாதுகாப்பானதா என தெரிந்துகொள்ளாம்ல நம் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

விண்ணப்பிக்கும்முன் கவனிக்க வேண்டியவை

  • நாம் விண்ணப்பிக்கும் முன் இணையதள முகவரியில் https மற்றும் லாக் சிம்பள் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவும்.
  • Two factor Authentication வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும்.
  • கடன் வழங்கும் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டதா என சரிபார்க்கவும்.
  • கடன் வழங்கும் நிறுவனத்தின் பிரைவசி பாலிசிகளை படித்து உங்கள் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என அறிந்துகொள்ளவும்.
  • கடன் வழங்கும் செயலிகளுக்கு தேவையற்ற அனுமதிகளை வழங்காமல் இருப்பது நல்லது.

இதையும் படிக்க : கரண்ட் அக்கவுண்ட் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் என்ன?

ஆவணங்களை பதிவேற்றும் போது கவனம்

ஆதார், பேங்க் ஸ்டேட்மென்ட் போன்ற ஆவணங்களை பதிவேற்றும்போது கவனமாக இருக்கவும். இமெயில் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் அனுப்புவதைத் தவிர்க்கவும். சில செயலிகள் ஆதார் எண்ணை மறைத்த வடிவில் பதிவேற்றும் வசதியை வழங்குகின்றன. விண்ணப்பித்த பிறகு உங்கள் வங்கி கணக்கு, இமெயில், கிரெடிட் ரிப்போர் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகல் நடந்திருந்தால் உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினரிடம் உங்கள் புகாரை பதிவு செய்யவும். மேலும் உடனடியாக உங்கள் பாஸ்வேர்டு போன்ற விவரங்களை மாற்றவும்.