Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Credit Card : பழைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்ய போகிறீர்களா?.. அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

Closing Old Credit Cards | பெரும்பாலான பொதுமக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் அவர்கள் தங்களது பழைய கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய விரும்புகின்றனர். ஆனால், அவ்வாறு பழைய கிரெடிட் கார்டை ரத்து செய்வதன் மூலம் ஏற்படும் சிக்கலை யாரும் தெரிந்துக்கொள்வதில்லை.

Credit Card : பழைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்ய போகிறீர்களா?.. அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Aug 2025 19:14 PM

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை (Credit Cards) பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் மக்கள் அதனால் ஏற்படும் குழப்பம் காரணமாக அவற்றை க்ளோஸ் செய்ய நினைக்கின்றனர். ஆனால், அவ்வாறு பழைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வதில் மிகப்பெரிய ஆபத்து உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இது கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பழைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்களின் வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட கிரெடிட் கார்டுகள்

பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளது. மாத சம்பளம் வாங்கும் பலரும் தங்களது தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக்கொள்கின்றனர். குறிப்பாக கிரெடிட் கார்டில் 45 நாட்களுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில், தங்களது தேவைகளை கிரெடிட் கார்டு மூலம் பூர்த்தி செய்துக்கொண்டு அதற்கான தொகையை பிறகு மாத தவணை முறையில் செலுத்திக்கொள்கின்றனர். இந்த முறை மிகவும் எளிமையாக உள்ளதால் இதனை பலரும் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க : Credit Score : கடனை திருப்பி செலுத்திய பிறகும் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படவில்லையா?.. அப்போ இத பண்ணுங்க!

கிரெடிட் கார்டை ரத்து க்ளோஸ் செய்யும் பொதுமக்கள் – சிக்கல் என்ன?

பெரும்பாலான பொதுமக்கள் ஆஃபர்கள் மற்றும் சலுகைகளுக்காக  கிரெடிட் கார்டுகளை வாங்குகின்றனர். கிரெடிட் கார்டு வாங்கிய புதிதில் அதற்கான சலுகைகள் அதிகம் வழங்கப்படும். ஆனால், நாளடைவில் அவை படிப்படியாக குறைந்துவிடும். இந்த நிலையில், பலரும் தங்களது பழைய கிரெடிட் கார்டுகளை க்ளோஸ் செய்து விடலாமா என என்னுகிறார்கள். அதன்படி பலர் தங்களது பழைய கிரெடிட் கார்டுகளை க்ளோஸ் செய்கிறார்கள். ஆனால், இதில் உள்ள சிக்கலை யாரும் புரிந்துக்கொள்வதில்லை.

இதையும் படிங்க : 2050 ஆம் ஆண்டு ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? 5 சிறந்த பாதுகாப்பான முதலீட்டு வழிகள் இதோ

பழைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வதில் என்ன சிக்கல்?

ஒருவர் ஒரு கிரெடிட் கார்டை நீண்ட காலம் பயன்படுத்திவிட்டு பின்னர் அதனை வேண்டாம் என க்ளோம் செய்கிறார் என்றால் அது அவரது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். உதாரணமாக ஒருவர் நீண்ட காலம் ஒரு கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது அது நீண்ட கிரெடிட் ஸ்கோர் வரலாற்றை கொண்டிருக்கும். இத்தகைய சூழலில் அந்த கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்யும் பட்சத்தில் அதன் மூலம் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.