Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Credit Card : ரிவார்டு பாயிண்ட்ஸா? கேஷ் பேக்கா? எது சிறந்தது?

Smart Credit Card Choices : இன்றைய டிஜிட்டல் உலகில் கிரெடிட் கார்டுகளின் பயன் இன்றியமையாததாக மாறிவிட்டது. குறிப்பாக கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பயனர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்ஸ், கேஷ்பேக் போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன. இந்த கட்டுரையில் ரிவார்டு பாயிண்ட்ஸ் வழங்கும் கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லதா? அல்லது கேஷ்பேக் வழங்கும் கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லதா? என்பது குறித்து பார்க்கலாம்.

Credit Card : ரிவார்டு பாயிண்ட்ஸா? கேஷ் பேக்கா? எது சிறந்தது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Aug 2025 17:10 PM

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் டிஜிட்டல் பேமெண்ட் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. குறிப்பாக கிரெடிட் கார்டு (Credit Card) ஒரு அவசியமான பயன்பாடாக மாறியிருக்கிறது. பல கரெடிட் கார்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், ரிவார்டு பாயிண்ட்ஸ் (Reward Points) போன்ற பல சலுகைகளை வழங்குகின்றன. இந்த நிலையில் கிரெடிட் கார்டை தேர்வு செய்யும் போது பலரும் கேட்கும் முக்கியமான கேள்வி ரிவார்டு பாயிண்ட்ஸ் பார்த்து வாங்க வேண்டுமா ? கேஷ் பேக் (Cashback) பார்த்து தேர்வு செய்ய வேண்டுமா என்பது தான். இந்த கட்டுரையில் வாழ்க்கை முறை மற்றும் செலவு பழக்கங்களின் அடிப்படையில் இரண்டு ஆப்சன்களில் எதை தேர்வு செய்ய வேண்டும் என்று விவிரமாக பார்க்கலாம்.

ரிவார்டு பாயிண்ட்ஸ் என்றால் என்ன?

கிரெடிட் கார்டில் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் எதிராக, குறிப்பிட்ட அளவுக்கு பாயிண்ட்ஸ்கள் கிடைக்கும். இந்த பாயிண்ட்களை பின்னர் டிராவல் டிக்கெட், கிப்ட் வவுச்சர், மொபைல், ஈலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவை வாங்கும்போது அவற்றை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் நமக்கு சலுகைகள் கிடைக்கும். உதாரணமாக, கிரெடிட் கார்டு மூலமாக ரூ.100 செலவிட்டால் 1 பாயிண்ட் கிடைக்கும் என்றால், ரூ.10,000 செலவிட்டால் நமக்கு 100 பாயிண்ட்ஸ் கிடைக்கும். இந்த பாயிண்ட்ஸின் மதிப்பு நீங்கள் எதை வாங்குகிறீர்கள் என்பதன் அடிப்படையில் மாறும்.

இதையும் படிக்க : ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. பட்டியல் இதோ!

கேஷ் பேக் என்றால் என்ன?

கேஷ் பேக் (Cash Back) என்பது நீங்கள் செலவிட்ட தொகையின் ஒரு சதவிகிதத்தை நேரடியாக திரும்ப பெறுவது. இது உங்கள் கார்டு கணக்கில் சேர்க்கப்பட்டு பின்னர் பயன்படுத்திக்கொள்ளலாம்.   உதாரணமாக, ஒரு கார்டு 5% கேஷ்பேக் அளிக்கிறது என்றால், நீங்கள் ரூ.1,000 ஆன்லைன் ஷாப்பிங்கில் செலவிட்டால் ரூ.50 திரும்ப கிடைக்கும்.

ரிவார்டு பாயிண்ட்ஸ் vs கேஷ்பேக்

  • கேஷ்பேக் என்பது நேரடியானது. நீங்கள் ஒரு பொருளை வாங்கும்போது, அதற்காக செலவிட்ட தொகைக்கு கேஷ்பேக் கிடைக்கும். அது உங்கள் கார்டில் வரவு வைக்கப்படும். பின்னாளில் ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டு பொருட்கள் வாங்கும்போது முன்னர் கேஷ்பேக் தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் தனிப்பட்ட விதிமுறைகள் எதுவும் இருக்காது.
  • ஆனால் கிரெடிட் கார்டு மூலம் பெறும் ரிவார்ட்ஸ் பாயிண்ட்ஸ்களை திரும்ப பயன்படுத்த பல விதிமுறைகள் இருக்கும். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடுகள் இருக்கும்.
  • நீங்கள் செலவழிக்கும் தொகைக்கு எப்போதும் கேஷ்பேக் பெறுவீர்கள். சில நிறுவனங்களைப் பொறுத்து அதன் சதவிகிதம் மாறலாம். ஆனால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • ரிவார்டு பாயிண்ட்ஸ்களை பொறுத்தவரை அதனை எங்கே பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தது. குறிப்பாக விமான டிக்கெட்டுகள் போன்றவற்றில் செலவிடும்போது அதன் மதிப்பு அதிகமாக இருக்கலாம்.
  • கேஷ் பேக் மூலம் பெறும் தொகையை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • ஆனால் ரிவார்டு பாயிண்ட்ஸ்களை குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • கேஷ் பேக் வழங்கும் கார்டுகள் குறைந்த கட்டணத்துடன் கிடைக்கும். சில கார்டுகளுக்கு ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
  • ஆனால் ரிவார்டு பாயிண்ட்ஸ்களை வழங்கும் கார்டுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதையும் படிக்க : 3 முறை ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ.. இருப்பினும் FD திட்டங்களுக்கு 8.5% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

 எது சிறந்தது?

அதிகமாக செலவு செய்பவர்கள், அதிகமாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்ஸ்கள் வழங்கும் கிரெடிட் கார்டுகள் சிறந்தது. அதே நேரம், பார்த்து செலவு செய்பவர்களுக்கு கேஷ்பேக் கார்டுகள் சிறந்தது. குறிப்பாக அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு இவ்வகை  கிரெடிட் கார்டுகள் சிறந்தததாக இருக்கும்.