தனிநபர் கடன் Vs தங்க நகை கடன்?.. இந்தியாவில் நிதி தேவைக்கு எது சிறந்தது?
Personal Loan Vs Gold Loan | இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு நிதி தேவை ஏற்படும்போது தனிநபர் கடன் மூலமாகவோ அல்லது தங்க நகை கடன் மூலமாகவே நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். இந்த நிலையில், இவை இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

பொதுமக்களுக்கு எதிர்பாராத நேரங்களில் நிதி தேவை ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு நிதி தேவை ஏற்படும் பொதுமக்கள் வங்கிகளில் கடன் வாங்கியோ அல்லது தங்களிடம் இருக்கும் தங்க நகைகளை அடகு வைத்தோ தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செதுக்கொள்கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் இந்த முறைகளை பின்பற்றி தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் நிலையில் தனிநபர் கடன் (Personal Loan) சிறந்தததா அல்லது தங்க நகை கடன் (Gold Loan) சிறந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தனிநபர் கடன்
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் பொதுமக்களுக்கு தனிநபர் கடன்களை வழங்குகின்றன. இந்த கடன் வழங்குவதற்கான விதிகள் ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடும். ஒருவரின் கிரெடிட் ஸ்கோர், வருமானம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த கடன் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை தனிப்பட்ட தேவைகள் மற்றும் தொழில் சார்ந்த தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்க வேண்டுமா?.. அப்போது இந்த திட்டத்துல இப்படி முதலீடு செய்யுங்க!




கவனிக்க வேண்டிய அம்சங்கள்
- தனிநபர் கடனை பொருத்தவரை எந்த வித சொத்துக்களையும் பினையம் வைக்க வேண்டாம்.
- கடன் பெறும் தொகையை வைத்து பல தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளலாம்.
- பணத்தை திருப்பி செலுத்த நீண்ட காலம் கிடைக்கும்.
- தனிநபர் கடனை பொருத்தவரை அதிக வட்டி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்த விரும்பினால் சில சமயங்களில் அதற்காக கட்டணம் செலுத்த வேண்டிய தேவையும் உள்ளது.
தங்க நகை கடன்
உங்கள் சொத்துக்களை விற்பனை செய்யாமல் நிதி உதவி பெற தங்க நகை கடன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது மிகவும் பாதுகாப்பான கடன் முறையாக கருதப்படுகிறது. இந்த வகை கடனை பொருத்தவரை நீங்கள் கிரெடிட் ஸ்கோரை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்
- தங்க நகை கடனுக்கு தனிநபர் கடனை விட மிக குறைந்த அளவிலே வட்டி வழங்கப்படுகிறது.
- தனிநபர் கடனை போல நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. மாறாக ஒருசில மணி நேரங்களில் தங்க நகை கடனை பெற்றுக்கொள்ளலாம்.
- கிரெடிட் ஸ்கோர் ஒரு தடையாக இருக்காது.
- நீங்கள் கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என்றால் உங்கள் நகையை இழக்க நேரிடும்.
- தங்கத்தின் விலையை மையப்படுத்தியே கடன் வழங்கப்படும்.
- மிக குறுகிய காலத்தில் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : FD : நிலையான வைப்பு நிதி திட்டம்.. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
எது சிறந்தது?
உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வேண்டும் என்றால் நீங்கள் நகை கடனை தேர்வு செய்யலாம். இதுவே உங்களுக்கு கடனை திருப்பி செலுத்த நீண்ட நாட்கள் தேவைப்படும் என்றால் தனிநபர் கடனை தேர்வு செய்யலாம். உங்களின் நிலையை மையப்படுத்தி கடன் முறையை தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.