RD : தினமும் ரூ.340 முதலீடு செய்து ரூ.17 லட்சம் சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா?
Post Office Recurring Deposit Scheme | அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் தொடர் வைப்பு நிதி திட்டம். இந்த நிலையில், தொடர் வைப்பு நிதி திட்டத்தில் தினமும் ரூ.340 முதலீடு செய்வதன் மூலம் ரூ.17 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்க கூடியவை தான் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் (Post Office Saving Schemes). இவை அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் எந்தவித நிதி இழப்பும் ஏற்படாது என்பதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இவ்வாறு அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதன்மையானது தான் தொடர் வைப்பு நிதி திட்டம். இந்த நிலையில், அஞ்சலக தொடர் வைப்பு நிதி (RD- Recurring Deposit) திட்டத்தில் தினமும் ரூ.340 முதலீடு செய்வதன் மூலம் ரூ.17 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் வைப்பு நிதி திட்டம் என்றால என்ன?
அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் ஒன்றுதான் இந்த தொடர் வைப்பு நிதி திட்டம். இது நிலையான வைப்பு நிதி திட்டத்தை போல ஒரு சேமிப்பு திட்டம் தான். ஆனால் நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கும், தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கு ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது, நிலையான வைப்பு நிதி திட்டத்தில் திட்டத்தின் தொடக்கத்திலேயே மொத்த தொகையையும் செலுத்த வேண்டும். பிறகு அதற்கான வட்டி வழங்கப்படும். ஆனால், தொடர் வைப்பு நிதி திட்டம் அப்படி இல்லை. அதனை மாத தவனை போல முதலீடு செலுத்த வேண்டும். மேலும் நிதி சூழலுக்கு ஏற்ப தொகையை அதிகரிக்கவும், குறைக்கவும் இதில் அனுமதி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறதா?.. உண்மை என்ன?




ரூ.340 முதலீடு செய்து ரூ.17 லட்சம் பெறுவது எப்படி?
இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்ன வென்றால் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி கணக்கிடப்பட்டு உங்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்திற்கு 5 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலையில், நீங்கள் தினமும் ரூ.340 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அதன்படி, ஒரு மாதத்தில் ரூ.10,200 முதலீடு செய்திருப்பீர்கள். இதுவே ஒரு ஆண்டுக்கு ரூ.1,22,400 முதலீடு செய்திருப்பீர்கள். அதன்படி திட்டத்தின் மொத்த காலமான 5 ஆண்டுகளில் ரூ.6,12,000 முதலீடு செய்திருப்பீர்கள். இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வசதியும் உள்ளது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் முதலீடு செய்த தொகை அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.17 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.