Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான FD.. 8.5 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
Three Years Fixed Deposit Schemes | பொதுமக்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்வதற்காக ஏராளமான திட்டங்கள் உள்ளன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் சில முக்கிய வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

பொதுமக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. காரணம், சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்கள் மற்றும் சவால்களை சந்திக்க முடியாமல் போய்விடும். எனவே ஏதேனும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) திட்டங்களில் முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும். இவ்வாறு சாமானிய மக்கள் முதலீடு செய்வதற்காக நடைமுறையில் உள்ள ஒரு திட்டம் தான் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit). இந்த திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான வருமானத்தை பெற உதவும். இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.5 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி – 8.5% வட்டி வழங்கும் வங்கிகள்
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.




சூர்யோதேய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
சூர்யோதேய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.15 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20, 000 வருமானம் வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
பந்தன் வங்கி
பந்தன் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.70 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : 45 வயதில் ரூ.4.7 கோடியுடன் ஓய்வுபெறும் நபர் – அவரது உறவினர் பகிர்ந்த சீக்ரெட்!
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.70 சதவீதம் வட்டி வழங்குகிறது.