Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PFF : மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெற உதவும் பிபிஎஃப் திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

PPF Investment for 40,000 Rupees Monthly Income | மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பணம் மிகவும் முக்கியம் ஆகும். பணம் இல்லை என்றால் அத்தியாவசிய தேவைகளை கூட வாங்கிக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும். இந்த நிலையில், பிபிஎஃப் திட்டத்தில் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெற எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PFF : மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெற உதவும் பிபிஎஃப் திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Jul 2025 23:30 PM

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பொருளாதார தேவை மற்றும் சிக்கல் ஏற்படலாம். இளமை காலத்திலேயெ இத்தகைய பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியாத நிலையில், முதுமை காலத்தில் அவற்றை சமாளிப்பது மிகவும் கடினமானதாக மாறிவிடும். சிலருக்கு முதுமை காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இருக்காது. இந்த நிலையில், முதுமை காலத்திலும் எந்த வித சிக்கல்களும் இல்லாமல் மாத வருமானம் பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு பொது வருங்கால வைப்பு நிதி  (PPF – Public Provident Fund) திட்டம் தான். இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் ரூ.40,000 வரை வருமானம் ஈட்ட எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதுமை காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும் பிபிஎஃப் திட்டம்

பொதுமக்களுக்கு முதுமை காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும் விதமாக இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் ஆகிய இடங்களில் நீங்கள் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் சிறந்த பலன்கள் கிடைப்பதால், தங்களது கடைசி காலத்தை திட்டமிடும் பொதுமக்கள் சிலர் இதனை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

மாதம் ரூ.40,000 வரை வருமானம் தரும் பிபிஎஃப் – முதலீடு செய்வது எப்படி?

7.1 சதவீதம் வட்டி கொண்டுள்ள இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாக உள்ள நிலையில், ஒருவர் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்து வருகிறார் என வைத்துக்கொள்வோம். அதன்படி, அவர் 15 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.22,50,000 முதலீடு செய்திருப்பார். இதற்கு வட்டியாக மட்டுமே ரூ.18,18,209 கிடைக்கும்.

இப்போது அந்த நபர் முதலீடு செய்வதற்காக மூன்று முறை கணக்கை நீட்டிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, மொத்தம் 30 ஆண்டுகளில் அவர் 1,54,50,911 மொத்த கார்பஸாக வைத்திருப்பார். இந்த மொத்த தொகையில் 60 சதவீதம் திரும்ப பெறப்பட்டது என்றால் பெறப்பட்ட தொகை ரூ.92,70,546 ஆக இருக்கும். மீதம் ரூ.61,80,364 ஆக இருக்கும். இதனை மீண்டும் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்தால் கார்பஸ் ரூ.66,19,170 ஆகவும்  அதற்கான வட்டி ரூ.4,38,805 ஆகவும் இருக்கும். இந்த தொகையை மாத வட்டியாக பெரும் பட்சத்தில், மாதம் ரூ.39,163 பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.