
Recurring Deposit
ரெக்கரிங் டெபாசிட் என்பது தொடர் வைப்புநிதி திட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் நல்ல தொகையை பெற முடியும். குறிப்பாக, பொதுமக்கள் தங்களின் குறுகிய கால மற்றும் நீண்ட கால பண தேவைகளுக்காக இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் தனியார் மற்றும் அரசு ஆகிய இரண்டு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அஞ்சலங்கள் மூலம், அரசு தொடர் வைப்புநிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமன்றி அந்த திட்டத்திற்கு நல்ல வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த தொடர் வைப்புநிதி திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். நிலையான வைப்புநிதி திட்டத்தை போல திட்டத்தின் தொடக்கத்திலே மொத்த பணத்தையும் செலுத்த வேண்டிய தேவை தொடர் வைப்புநிதி திட்டத்திற்கு இல்லை. இந்த திட்டத்தில் பயனர்கள் மாதம், மாதம் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 12 மாதங்கள் வரை முதலீடு செய்யலாம். இதுவே, நீண்ட நாட்கள் முதலீடு செய்ய வேண்டும் என விரும்பினால் சுமார் 120 மாதங்கள் வரை முதலீடு செய்யலாம். அதாவது 4 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது
Recurring Deposit : மாதம் ரூ.2,800 முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டும் ரூ.31,824 கிடைக்கும்!
Best Return Post Office Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தொடர் வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் மாதம் ரூ.2,800 முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டும் ரூ.31,824 பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: May 19, 2025
- 19:33 pm