Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Recurring Deposit : மாதம் ரூ.2,800 முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டும் ரூ.31,824 கிடைக்கும்!

Best Return Post Office Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தொடர் வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் மாதம் ரூ.2,800 முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டும் ரூ.31,824 பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Recurring Deposit : மாதம் ரூ.2,800 முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டும் ரூ.31,824 கிடைக்கும்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 19 May 2025 19:33 PM

பொதுமக்கள் சேமிப்பதற்கு அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை (Saving Schemes) செயல்படுத்தி வருகிறது. நிலையான வைப்பு நிதி திட்டம், தொடர் வைப்பு நிதி திட்டம், மாத வருமான திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மிகவும் சிறப்பானவையாக கருதப்படுகின்றன. காரணம் இந்த திட்டங்களுக்கு பிற திட்டங்களை விடவும் அதிக வட்டி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அதிக லாபம் பெற் முடியும் என்பதால் பெரும்பாலான நபர்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.

அதிக பலன்களை தரும் தொடர் வைப்பு நிதி திட்டம்

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் உள்ள சிறப்பு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி (RD – Recurring Deposit) திட்டம். இந்த திட்டம் நிலையான வைப்பு நிதி திட்டத்தை விட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதாவது நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் திட்டத்தின் முடிவில் மொத்த தொகையையும் செலுத்த வேண்டும். நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்களோ அத்தனை ஆண்டுகளுக்கு வட்டி வழங்கப்படும். ஆனால் தொடர் வைப்பு நிதி திட்டம் அப்படி இல்லை. ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து அதில் மாதம் மாதம்  முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மாதம் ரூ.2,800 முதலீடு செய்து ரூ.31,824 வட்டியாக பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதம் ரூ.2,800 முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டும் ரூ.31,824 பெறலாம்

அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தது ரூ.100 முதல் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.2,800 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.1,68,000 முதலீடு செய்திருப்பீர்கள். 5 ஆண்டுகளுக்கு 6.7 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் மொத்தமாக ரூ.31,824 வட்டியாக கிடைக்கும். இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.1,68,000 மற்றும் அதற்கான வட்டி ரூ.31,824 ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.1,99,824 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?...
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு...
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!...
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்...
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்...
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு...
வாழ்க்கையில் இந்த 7 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க!
வாழ்க்கையில் இந்த 7 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க!...
சென்னையில் அமலுக்கு வரும் குடிநீர் ஏ.டி.எம்.. எப்போது? எங்கே?
சென்னையில் அமலுக்கு வரும் குடிநீர் ஏ.டி.எம்.. எப்போது? எங்கே?...
வீட்டில் எறும்பு தொல்லை இருக்கா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!
வீட்டில் எறும்பு தொல்லை இருக்கா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!...
இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த 10 பேர் கைது
இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த 10 பேர் கைது...
நிலையான வைப்பு நிதி கடன் - இத்தனை சிறப்பு அம்சங்களா?
நிலையான வைப்பு நிதி கடன் - இத்தனை சிறப்பு அம்சங்களா?...