இனி ஆதார் e-KYC மூலம் RD மற்றும் PPF கணக்குகளை பராமரிக்கலாம் – எப்படி செயல்படும்?
Post Office e-KYC Update : இந்திய தபால் துறை, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC சேவையை தற்போது RD மற்றும் PPF கணக்குகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதிய கணக்குகளை திறப்பதும், கணக்குகளை கையாள்வது போன்ற சேவைகளை எளிதாக மேற்கொள்ளலாம். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய தபால் துறையின் சேமிப்பு திட்டங்களுக்கு, ரெக்கரிங் டிபாசிட் (Recurring Deposit – RD) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) கணக்குகளுக்கும் ஆதார் (Aadhaar )அடிப்படையிலான பயோமெட்ரிக் e‑KYC வசதியை பயன்படுத்த துவங்கியிருக்கிறது. இதன் மூலம், பணம் வரவு வைக்க மற்றும் எடுக்க உள்ளிட்ட பல சேவைகள் காகித வடிவில் அல்லாமல் ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் சோதனை மூலம் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் ஆன்லைனிலேயே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியும். இந்த முறை முன்பு மாத வருமான திட்டம், டைம் டெபாசிட், கிஷான் விகாஸ் பத்ரா தேசிய சேமிப்பு சான்றிதழ் போன்ற சேமிப்பு திட்டங்களில் மட்டுமே இருந்தன.
இதன் சிறப்பம்சங்கள் என்ன?
- இதன் மூலம் புதிய ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளை ஆதார் பயோமெட்ரிக் அடிப்படையில் துவங்கலாம்.
- மேலும் இந்த முறையில் ஆர்டி மற்றும் பிபிஎஃப் கணக்குகளில் பணம் செலுத்துதல் மற்றும் எடுப்பதற்கு ஆதார் உதவியுடன் செய்யலாம். மேலும் இதற்காக பே ஸ்லிப் அல்லது பிற சான்றிதழ்கள் எதுவும் தேவையில்லை.
- மேலும் லோன் கணக்கை துவக்கவும் அல்லது விடுவிக்கவும் ஆதார் பயன்படுத்தி செய்ய முடியும். மேலும் பணம் எடுப்பது, அல்லது பணம் போடுவது ஆகிய பணிகளை ஆதார் உடன் சரிபார்க்கப்படும்.
- பிபிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் (No limit) பணம் எடுத்துக்கொள்ளலாம்.
- பழைய முறையில் நீங்கள் பணத்தை சேமிக்க, மற்றும் பணம் எடுக்க அதற்கான படிவங்களை நிரப்பி தபால் நிலையத்தில் சமர்பிக்க வேண்டியிருந்தது. இனி அந்த நடைமுறை இருக்காது.
இதையும் படிக்க: தொழில் தொடங்க அரிய வாய்ப்பு! – தபால் நிலைய உரிமையைப் பெறலாம் – தகுதிகள் என்ன?
பாதுகாப்பு நடவடிக்கைகள்
ஆதார் எண்களின் பாதுகாப்பிற்காக மறைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். உதாரணமாக xxxx-xxxx-1234 என்பது போலத் தான் ஆதார் இருக்கும். மேலும் ஏதேனும் ஆவணங்களில் முழு ஆதார் எண்கள் இருந்தால் அதில் முதல் 8 இலக்கங்களை கருப்பு பேனாவால் தபால் நிலைய ஊழியர்கள் கருப்பு பேனாவால் மற்றைக்க வேண்டும். இது பிற பயன்படாடுகளுக்கும் பொருந்தும். எந்த வகையிலும் ஆதார் எண்ணை யாரும் பார்க்காத வகையில் வடிவமைக்கப்படும்.




இதையும் படிக்க: அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டியை குறைக்கும் அரசு?.. வெளியான முக்கிய தகவல்!
e-KYC செயல்முறை எப்படி செயல்படுகிறது?
- தபால் நிலைய அலுவலக உதவியாளர் முதலில் நமது பயொமெட்ரிக் முறையில் நமது கைரேகை மூலம் ஆதாரை உறுதிப்படுத்துவார்.
- பின்னர் தேவையான தகவல்களை பதிவிட்ட பிறகு, நம்மிடம் பயோமெட்ரிக் முறையில் பணப்பரிவர்த்தனைக்கான செயல்பாடுகளை நிறைவு செய்வார்.
- இதற்கு எவ்வித ஆவணங்களும் சமர்பிக்க தேவையில்லை. மேலும் முன்பு போல படிவங்களை நிரப்பி சமர்பிக்க தேவையில்லை.
- நம் கணக்கு துவங்கும் போது சமர்பிக்கும் படிவத்தில் குறிப்பிடும் தொகையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும் விரைவில் இந்த நடைமுறை கணக்கை முடிக்க, நாமினி விவரங்களை புதுப்பிக்க, நமது கணக்கை இடமாற்றம் செய்ய போன்ற சேவைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.