Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யப்போகிறீர்களா? வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை

PPF Interest May Drop : இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 2025 ஆம் ஆண்டு 100 புள்ளிகள் குறைத்திருக்கின்றனர். இந்த நிலையில் வருகிற ஜூலை 1, 2025க்கு பிறகு சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் குறையக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பிபிஎஃப், என்எஸ்சி, எஸ்சிஎஸ்எஸ் போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் ஜூன் 30க்குள் தற்போதைய வட்டியில் முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யப்போகிறீர்களா? வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 28 Jun 2025 18:35 PM

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதத்தை (Repo Rate) குறைத்துள்ளது. இதன் மூலம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மக்கள் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். ஆனால் இதே மாற்றம், சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தையும் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  தற்போது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தின் வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது. இது, 10 ஆண்டு அரசு பத்திரங்களின் சராசரி வருவாயின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறையும் என கூறப்படுகிறது.

வட்டி விகிதம் குறைப்படுவதற்கு காரணம் என்ன?

இதனால் இந்தியாவில் மக்கள் அதிகம் முதலீடு செய்யும் பிபிஎஃப், நேஷனல் சேவிங்ஸ் சான்றிதழ் (NSC), சுகன்யா சம்ருத்தி யோஜனா திட்டம் (SSY), முதியோர் சேமிப்பு திட்டம் (SCSS) மற்றும் தபால் அலுவலக டெபாசிட்கள் ஆகியவையே நேரடியாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  2025 ஆம் ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களில் ரெப்போ விகிதம் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் வங்கிகளும் தங்களது வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. மேலும் 10 ஆண்டு அரசு பத்திரங்களின் வருமானம் ஜனவரி 1, 2025 இல் 6.779% இருந்து ஜூன் 24,2025 இல் 6.247% ஆகக் குறைந்துள்ளது. இது வட்டி விகிதத்தை குறைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

சியாமளா கோபிநாத் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், வட்டி விகிதம் 10 ஆண்டு அரசுப் பத்திரங்களின் சராசரி மகசூல் + 0.25% ஆக நிர்ணயிக்கப்படுகிறது. சியாமளா கோபிநாத் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், வட்டி விகிதம் 10 ஆண்டு அரசுப் பத்திரங்களின் சராசரி வருவாய் 0.25 சதவிகிதமாக ஆக நிர்ணயிக்கப்படுகிறது. மார்ச் 24, 2025 முதல் ஜூன் 24, 2025 வரை பத்திரங்களின் சராசரி வருவாய் 6.325 சதவிகிதமாகும். அதில் 25 புள்ளிகள் சேர்த்தால் மொத்த 6.575 சதவிகிதமாக மாறும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

நேஷனல் சேவிங்ஸ் சான்றிதழ் (NSC), முதியோர் சேமிப்பு திட்டம் (SCSS), மற்றும் தபால் அலுவலகம் டெபாசிட் திட்டங்களில் ஜூன் 30,2025க்குள் முதலீடு செய்தால், தற்போதைய உயர்ந்த வட்டி விகிதம் நிலைத்திருக்கும். அதாவது, வட்டி குறைந்த பிறகும், நீங்கள் இப்போதே முதலீடு செய்திருப்பதால், பழைய வட்டி விகிதமே உங்களுக்கு கிடைக்கும்.

வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ருத்தி யோஜனா திட்டங்களில் (SSY) மாதந்தோறும் வட்டி கணக்கிடப்படும். எனவே, இந்த திட்டங்களில் முதலீடு செய்தாலும், எதிர்காலத்தில் வட்டி விகிதம் குறைந்துவிட்டால், அதற்கேற்ப உங்கள் வருவாயும் குறைய வாய்ப்பு உண்டு.

நீண்ட காலத்துக்கு நிச்சயமான வருமானம் வேண்டும் என்றால், தற்போதைய வட்டியில் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்து விடலாம். , வட்டி குறையக்கூடிய சூழ்நிலையில் நீண்ட கால அரசு பத்திரங்களில் அடிப்படையிலான ஃபண்டுகளான டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்ஸ் ( Target Maturity Funds ) மற்றும் லாங் டெர்ம் டெப்ட் ஃபண்ட்ஸ் ( Long-Term Debt Funds)  போன்ற பாதுகாப்பான முதலீடுகளையும் பரிசீலிக்கலாம்.