Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இவ்வளவா?

Chennai Gold Rate On 2025 August 02 : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.74,000 தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இவ்வளவா?
தங்கம் விலைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 02 Aug 2025 10:21 AM

சென்னை, ஆகஸ்ட் 02 :  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.74,320க்கு (Chennai Gold Rate) விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாதத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலை ரூ.1100 வரை உயர்ந்தது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. இந்திய மக்களின் முக்கிய சேமிப்பாக இருப்பது தங்கம். பெரும்பாலான இந்தியர்கள் தங்கத்தை பிரதான சேமிப்பாக வைத்திருக்கின்றன.  இதனால், தங்கம் விலையின் உயர்வு நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால், நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது பெரும் சவாலாகவே உள்ளது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு விருகிறது.  பெரிய அளவில் விலை அதிகரிக்கவும், குறையவும் இல்லை.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. அதாவது, ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனையாதுஅதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்தது. 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதியான நேற்று கூட  ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ, 73,200க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,150க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம், தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.74,000-ஐ தாண்டி இருக்கிறது. அதன்படி,  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து,  74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also Read : யுபிஐ-ல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, 9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை, ஒரு கிலோ வெற்றி ரூ.1,23,000 ஆகவும், ஒரு கிராம் ரூ.123க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக  தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மொத்தமாக உயர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

  • ஆகஸ்ட் 01, 2025 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,150க்கும், ஒரு சவரன் ரூ.74,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஜூலை 31, 2025 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,170க்கும், ஒரு சவரன் ரூ.73,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஜூலை 30, 2025 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,210க்கும், ஒரு சவரன் ரூ.73,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஜூலை 29, 2025 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,150க்கும், ஒரு சவரன் ரூ.73,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஜூலை 28, 2025 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,160க்கும், ஒரு சவரன் ரூ.73,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஜூலை 27, 2025 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,160க்கும், ஒரு சவரன் ரூ.73,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஜூலை 26, 2025 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,160க்கும், ஒரு சவரன் ரூ.73,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஜூலை 25, 2025 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,210க்கும், ஒரு சவரன் ரூ.73,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • ஜூலை 24, 2025 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,255க்கும், ஒரு சவரன் ரூ.74,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Also Read : ஆகஸ்ட் 2 ஆம் தேதி தபால் நிலைய சேவைகள் ரத்து.. வெளியான முக்கிய அறிவிப்பு!

இப்படியாக, தங்கம் விலை கடந்த 10 நாட்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.