EPFO : சென்னையில் இபிஎஃப்ஓ குறைதீர் முகாம்.. எப்போது தெரியுமா?
Employee Provident Fund Organization Camp | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஏராளமான ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அந்த கணக்குகளில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டு வரும். இந்த தொகையை ஊழியர்கள் தங்களது திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல் மற்றும் வீடு வாங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள ஒரு அம்சம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த அமைச்சகம் ஊழியர்களின் எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் வகையில் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த இபிஎஃப்ஓவில் ஏதேனும் மாற்17921றங்களை செய்ய வேண்டும் என்றால் பயனர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளம் அல்லது அலுவலகத்தை நாட வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், தற்போது அதற்கு அவசியம் இல்லை. அதாவது, சென்னையில் ஜூலை 28, 2025 அன்று குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பயனர்கள் பல சேவைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏராளமான சிறப்பு அம்சங்களை வழங்கும் ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைச்சகம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் இந்தியாவில் பணியாற்றும் தகுதியுள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் உறுப்பினர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அது ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும். இந்த வட்டியுடன் கூடிய பிஎஃப் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையிலும், அவர்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் உள்ள சிறந்த அம்சமாக ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைச்சகம் உள்ளது.
இதையும் படிங்க : EPFO : பிஎஃப் வட்டியை வரவு வைக்கும் இபிஎஃப்ஓ.. சுலபமாக தெரிந்துக்கொள்வது எப்படி?




சென்னையில் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற முகாம்கள் சென்னையில் ஜூலை 28, 2025 அன்று நடைபெற உள்ளது. சென்னையில் மொத்தமாக 10 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சக கணக்குடன் ஆதார் கார்டு இணைத்தல், வாரிசுதாரர் பதிவு, ஆன்லைன் சேவை வேலைவாய்ப்புடம் இணைந்த ஊக்கத்தொகை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், முகாம்களில் பங்கேற்று அவற்றை குறித்து தெரிந்துக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் www.epfindia.gov.in என்ற இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.