FD : நிலையான வைப்பு நிதி திட்டம்.. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
Fixed Deposit Scheme | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், சில வங்கிகளின் அதிக வட்டி கொண்ட குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டங்கள் ( FD – Fixed Deposit Scheme) பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. காரணம், இந்த திட்டத்தில் நிதி இழப்பு அபாயம் இல்லை. இதன் காரணமாக தங்களது பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதே சமயம் லாபமும் கிடைக்க வேண்டும் என நினைக்கும் மக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகளில் இந்த நிலையான வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பல்வேறு கால அளவீடுகளுடன் செயல்படுத்தப்படும் எஃப்டி திட்டம்
பெரும்பாலான வங்கிகள் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வட்டியை வழங்குகின்றன. இதில் முக்கிய அம்சமாக பொது குடிமக்களை விடவும் மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்பு நிதி திட்டத்தில் அதிக வட்டியும், பல சிறப்பு அம்சங்களும் கிடைக்கும்.
செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
இந்த வங்கியின் 1111 நாள் கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம் வட்டியும், பொது குடிமக்களுக்கு 7 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பொது குடிமக்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.1,23,519 கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.1,25,379 கிடைக்கும். ரூ.2 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் பொது குடிமக்களுக்கு ரூ.2,47,038 கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.2,50,759 கிடைக்கும்.




இதையும் படிங்க : RD : தினமும் ரூ.340 முதலீடு செய்து ரூ.17 லட்சம் சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா?
ரூ.3 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் பொது குடிமக்களுக்கு கு ரூ.3,70,557 கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.3,76,138 கிடைக்கும். ரூ.4 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் பொது குடிமக்களுக்கு ரூ.4,94,076 கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.5,01,517 கிடைக்கும். ரூ.5 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் பொது குடிமக்களுக்கு ரூ.6,17,595 கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.6,26,897 கிடைக்கும்.
யூனியன் வங்கி
யூனியன் வங்கி தனது 456 நாட்கள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.85 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீத வட்டியும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் பொது குடிமக்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.1,08,856 கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.1,09,526 கிடைக்கும். ரூ.2 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.2,17,712 கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.2,19,052 கிடைக்கும்.
இதையும் படிங்க : Emergency Fund : அவசர தேவைக்கு உதவும் எமெர்ஜென்சி ஃபண்ட்.. ஏன் அவசியம்?
ரூ.3 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் பொது குடிமக்களுக்கு ரூ.3,26,567 கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.3,28,578 கிடைக்கும். ரூ.4 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் பொது குடிமக்களுக்கு ரூ.4,35,423 கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.4,38,104 கிடைக்கும். ரூ.5 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் பொது குடிமக்களுக்கு ரூ.5,44,279 கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ரூ.5,47,630 கிடைக்கும்.