வாடகை வீடு Vs சொந்த வீடு.. இரண்டில் எது சிறந்தது?.. நிபுனர்கள் கூறுவது என்ன?
Rental House Vs Own House | வீடு என்பது மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. எனவே வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால், சிலரோ அவை அதிக கடனை உருவாக்கி விடும் என கருதுகின்றனர்.

மனிதர்களாக பிறந்தவர்களுக்கு சில அத்தியாவசிய தேவைகள் உள்ளன. அதாவது உணவு, உடை, இருப்பிடம் என முக்கிய தேவைகள். இவை மூன்றுமே ஒரு மனிதர் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. எனவே பலரும் எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என நினைத்து அதற்காக மிக கடுமையாக உழைப்பர். சிலர் சொந்த வீடு வாங்க முடியாததால் மாத வாடகை செலுத்தி வாடகை வீட்டில் (Rental House) வசிப்பர். இந்த நிலையில், வாடகை வீட்டில் வசிப்பது லாபமா அல்லது சொந்த வீடு (Own House) வாங்குவது லாபமானதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாடகை வீடு Vs சொந்த வீடு – இரண்டில் எது சிறந்தது?
பெரும்பாலான பொதுமக்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக பணத்தை சேகரித்து வருவர். அப்படி சேமிப்பு இல்லை என்றால் வங்கியில் கடன் வாங்கி வீடு குறித்த தங்களது கனவை பூர்த்தி செய்துக்கொள்வர். இந்த நிலையில், கடன் வாங்க விருப்பமில்லாதவர்கள் மற்றும் சேமிப்பு இல்லாதவர்கள் வாடகை வீடே போதுமானது என நினைப்பர். கடன் வாங்கி அதற்கு வட்டி செலுத்துவதற்கு பதிலாக வாடகை வீட்டில் இருந்து சேமிக்கலாம் என நினைப்பர். ஆனால், அது தவறான முடிவாகும்.
இதையும் படிங்க : Personal Loan : 10 நிமிடங்களுக்கும் குறைவாக தனிநபர் கடன் பெறலாம்.. இந்த அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!




வாடகை வீடு
வாடகை வீட்டில் வசிப்பது தேவையற்ற கடன்களை பெறாமல், இருக்கின்ற பணத்தை வைத்து வாழும் வாக்கை முறை என பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறானது. குறுகிய கால தேவைகளுக்காக அல்லது பணி மாறுதல்களின்போது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு வாடகை வீட்டில் இருக்க வேண்டும் என்றால் அது சிறப்பானதாக இருக்கும். ஆனால், வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் இருப்பது பணத்தை வீணாக்கும் செயலாகும். காரணம், வீட்டு வாடகைக்காக மாதம் மாதம் செலுத்தும் தொகைக்கு எந்த வித பயனும் இல்லாமல் போகும். தொடர்ந்து பல வருங்கலாக வீட்டு வாடகை செலுத்துவது சேமிப்பு இல்லாமல் செய்துவிடும்.
இதையும் படிங்க : Home Loan : எவ்வளவு மாத சம்பளம் வாங்கினால் எவ்வளவு ரூபாய் வரை வீட்டு கடன் கிடைக்கும்?.. தெரிந்து கொள்ளுங்கள்!
சொந்த வீடு
சொந்த வீடி வாங்கவோ அல்லது கட்டவோ அதிக பணம் செலவாகும். ஆனால், முடிவில் உங்களிடம் ஒரு அசையா சொத்து இருக்கும். மொத்தமாக பணம் செலுத்தியோ அல்லது மாத தவணை முறையில் பணம் செலுத்தியோ எப்படி வீடு வாங்கினாலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து உங்களுக்கு என சொந்தமாக ஒரு வீடு இருக்கும். ஆனால், வாடகை வீட்டில் இருப்பது அப்படி அல்ல, எத்தனை ஆண்டுகள் நீங்கள் வாடகை வீட்டில் இருந்தாலும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாது. எனவே வாடகைக்கு இருப்பதை விடவும் வீடு கட்டுவது அல்லது வாங்குவது எப்போதுமே சிறந்த முடிவாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.