AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இத பண்ணலன்னா, உங்கள் வீடு உங்கள் சொத்தாக கருதப்படாது – ரியல் எஸ்டேட் நிபுணர் எச்சரிக்கை!

Property Ownership Legal Warning : ஒருவர் தான் குடியிருக்கும் வீட்டை பதிவு செய்திருந்தாலும், கரண்ட் பில் கட்டிவந்திருந்தாலும், உரிமை மாற்று சான்றிதழ் இல்லை என்றால் அது உங்கள் சொத்தாக கருதப்படாது என ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஐஸ்வர்யா ஶ்ரீ கபூர் எச்சரிக்கிறார்.

இத பண்ணலன்னா, உங்கள் வீடு உங்கள் சொத்தாக கருதப்படாது – ரியல் எஸ்டேட் நிபுணர் எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Jun 2025 16:11 PM IST

நாம் வீட்டில் குடியிருக்கிறோம், கரண்ட் பில் (EB Bill), குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்தையும் செலுத்துகிறோம். வீட்டையும் நமது பெயரில் பதிவு செய்துள்ளோம் என வைத்துக்கொள்வோம். இவ்வளவு இருந்தும் இந்திய சட்டத்தின் பார்வையில்  நாம் அந்த வீட்டின் சொந்த உரிமையாளர் இல்லாமல் இருக்கலாம் என ரியல் எஸ்டேட் (Real Estate) ஆலோசகர் ஐஸ்வர்யா ஶ்ரீ கபூர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும்பாலான இந்தியர்களின் தவறான நம்பிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. உரிமை மாற்ற சான்றிதழ் (Mutation Certificate) என்ற செயல் வெறும் அதிகாரபூர்வக் கடமை  மட்டும் அல்ல. அது தான் உங்களது சொத்து உரிமையை சட்டபூர்வமாக அரசுப் பதிவுகளில் நிரூபிக்கும் முக்கியமான ஆதாரம்.

பதிவு செய்தால் மட்டும் உரிமையாளர் கிடையாது!

இந்தியாவில் சொத்துரிமை இடமாற்றச் சட்டம் 1882ன் (Transfer of Property Act, 1882) படியும், கடந்த 2012 ஆம் ஆண்டு சுராஜ் லேம்ப்ஸ் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியும்  சொத்தின் உரிமையை நிரூபிக்க பதிவு மட்டும் போதாது என தெளிவாக கூறுகிறது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த மற்றொரு வழக்கின் தீர்ப்பிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் படி பதிவு செய்யப்பட்ட ஆவணம் மட்டும் போதாது. உரிமையை சட்டப்படி நிரூபிக்க வேண்டும். அதற்கு உரிமை மாற்று சான்றிதழ் அவசியம் உங்களிடம் இருக்க வேண்டும்

வீட்டின் உரிமை குறித்து எச்சரிக்கும் ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஐஸ்வர்யா ஸ்ரீ கபூரின் லிங்க்ட்இன் பதிவு

உங்கள் வீடு உங்கள் சொத்து என்பதை நிரூபிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. பதிவுசெய்யப்பட்ட விற்பனை ஆவணம் (Registered Sale Deed)

  2. முந்தைய உரிமையாளர்களின் சட்டப்பூர்வ உரிமைக்கான ஆவணம் (Clear Chain of Title)

  3. தற்போதைய உரிமையாளரின் பெயரில்  உரிமை மாற்று சான்றிதழ் (Mutation Certificate)

  4. மின் கட்டணம், வரி செலுத்தும் ரசிது போன்ற உரிமையாளர் வசிப்பதற்கான ஆதாரம் (Possession Proofs)

இந்த ஆவணங்கள் உங்களிடம் இல்லை என்றால், நீங்கள் வீடு வாங்கியிருந்தாலும், சட்ட ரீதியாக உங்கள் பெயரில் சொத்து இல்லை என கருதப்படலாம்.

தலைமுறை வீடுகளும் ஆபத்து

மக்களால் அலட்சியமாக விடப்படும் விஷயம் என்னவெனில், ஒரு வீட்டில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும்போது, அந்த வீட்டுக்கான உரிமை மாற்றம் செய்யப்படாமல் இருக்கும். வீடு இருக்கிறது, வசிக்கிறோம், வரி கட்டுகிறோம், ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என்றால், சட்ட ரீதியாக அது உங்கள் சொத்து இல்லை. இதனால் “உங்கள் சொந்த உறவினர் ஒருவர் கோர்ட் வழக்கு தொடர்ந்தால், 20 வருட அமைதியை இரண்டு நாளில் இழக்க நேரிடும்.

உரிமை மாற்ற சான்றிதழ் இல்லாதது தான் 80 சதவிகித வழக்குகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீண்ட காலம் நடைபெறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இது குடும்ப உறவுகளை பாதிப்பதுடன் நமது பணத்தையும் இழக்க நேரிடும்.  அழிக்கின்றன. எனவே வீடு வாங்கும்போது Mutation Certificate என்ற உரிமை மாற்று சான்றிதழையும் பெற்றிருப்பது அவசியம்.

Follow Us