AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Online Shopping : ஆன்லைன் ஷாப்பிங்கில் இந்த விஷயங்களை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. இல்லனா சிக்கல்!

Safe Online Shopping | ஷாப்பிங் செய்வதற்கு பல ஆன்லைன் செயலிகள் உள்ள நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி பொருட்களை வாங்குகின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் ஷாப்பிங் செய்வதன் மூலம் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Online Shopping : ஆன்லைன் ஷாப்பிங்கில் இந்த விஷயங்களை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. இல்லனா சிக்கல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jun 2025 15:37 PM IST

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) காரணமாக தற்போது அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு விட்டது. முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் கடைகளுக்கு ஏறி, இறங்கி அந்த பொருளை தொட்டுப் பார்த்து அதன் தரத்தை சோதித்த பிறகு தான் வாங்குவார்கள். ஆனால் தற்போது அத்தகைய சூழல் இல்லை. தற்போதைய நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping) நேரத்தை குறைத்து, அலைச்சல் இல்லாமல்இல்லாமல் வீட்டிலிருந்தே பொருட்களை வாங்க உதவுவதால் பெரும்பாலான மக்கள் அதனை தேர்வு செய்கின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் மிக எளிதானதாக இருந்தாலும் அதில் சில சிக்கல்களும் உள்ளன. அவை என்ன என்பது குறித்தும், அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

இணையதளத்தின் நம்பகத்தன்மை

நீங்கள் ஒரு பொருளை ஏதேனும் இணையதளத்தில் வாங்குகிறீர்கள் என்றால் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்வது மிகவும் அவசியம் ஆகிறது. குறிப்பாக, பிரபலமான மற்றும் நன்கு தெரிந்த இணையதளங்களில் மட்டுமே பொருட்களை ஆர்டர் செய்யுங்கள். காரணம், ஏராளமான போலி இணையதளங்கள் மூலம் தொடர் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர் மதிப்புரைகள்

நீங்கள் இணையத்தில் ஏதேனும் ஒரு பொருளை ஆர்டர் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதன் கஸ்டமர் ரிவியூஸ்களை (Customer Reviews) சோதனை செய்வது அவசியம் ஆகிறது. காரணம் சில பொருட்கள் இணையதளத்தில் பார்ப்பதற்கு சிறந்ததாக தோன்றினாலும், அந்த பொருட்களை வாங்கும்போது மோசடியில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே கஸ்டமர் ரிவியூ பார்த்து பொருட்களை வாங்குவது சிறந்தது.

விலை மற்றும் சலுகைகள்

தற்போது ஒரே பொருளை பல இணையதளங்கள் விற்பனை செய்கின்றன. அவை வெவ்வேறு விலைகளிலும் அந்த பொருட்களை விற்பனை செய்கின்றனர். எனவே எந்த இணைய தளத்தில் விலை குறைவாக உள்ளது என்பதை சோதனை செய்து பொருட்களை வாங்குங்கள். இதன் மூலம் அதிக கட்டணம் செலுத்துவதை தவிர்க்க முடியும்.

ரிட்டன் மற்றும் ரீஃப்ணட்

நீங்கள் ஆன்லைனில் இணையதளங்களில் பொருட்களை வாங்கும்போது அவற்றுக்கு ரிட்டன் மற்றும் ரீஃபண்ட் (Return and Refund) உள்ளதா என்பதை சோதனை செய்து பாருங்கள். காரணம், பெரும்பாலான நேரங்களில், ரிட்டன் மற்றும் ரீஃபண்ட் இல்லாத இணையதளங்கள் மோசடி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

கட்டண முறை

ஆன்லைனில் பொருட்களை வாங்குவதால் ஆன்லைன் பேமெண்ட் செய்ய வேண்டும் என்றும் சிலர் கூறுவர். ஆனால், அவ்வாறு செய்வது உங்களை மோசடியில் சிக்க வைத்துவிடும். நீங்கள் ஏதேனும் புதிய இணையதளத்தில் பொருட்களை ஆர்டர் செய்கிறீர்கள் அல்லது உங்களுக்கு ஆன்லைன் விற்பனை மீது நம்பிக்கை இல்லை என்றால் கேஷ் ஆன் டெலிவரி (Cash on Delivery) ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் மோசடி செய்யப்படுவதை தவிர்க்கலாம்.

Follow Us