இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ.67,000 கோடி.. மத்திய அரசு தகவல்!
67,000 Crore Rupees Unclaimed Deposits | இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் மொத்தம் ரூ.67,000 கோடி வைப்பு பணம் உரிமை கோரப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 67,000 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை (Deposit) பணம் உரிமை கோரப்படாமல் உள்ளதாக மத்திய அரசு (Central Government) தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதில் எந்த எந்த வங்கிகளில் எவ்வளவு தொகை உரிமை கோரப்படாமல் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், 67,000 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை உரிமை கோரப்படாமல் உள்ளது அமைச்சர் கூறியுள்ள புள்ளி விவரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கிகளில் பணத்தை வைப்பு வைக்கும் பொதுமக்கள்
பொதுமக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் செலவுக்கு போக மீதமுள்ள பணத்தை அவசர தேவைகளுக்காக வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வைத்துக்கொள்வர். வீட்டில் பணம் வைத்திருப்பதை விடவும் வங்கி கணக்கில் பணம் இருப்பது பாதுகாப்பானது என நினைக்கும் பொதுமக்கள் இவ்வாறு பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி வைத்துக்கொள்கின்றனர்.
இதையும் படிங்க : Personal Loan : 10 நிமிடங்களுக்கும் குறைவாக தனிநபர் கடன் பெறலாம்.. இந்த அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!




இந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் இவ்வாறு வங்கி கணக்கில் பணத்தை வைப்பு வைத்திருக்கும் நிலையில், சிலர் அந்த பணத்தை எடுக்காமல் அப்படியே விட்டுவிடர். உயிரிழப்பு, புதிய வங்கி கணக்கு தொடங்குதல், இடம் மாற்றம், வங்கி கணக்கு விவரங்களை மறந்துவிடுவது உள்ளிட்டவை இதற்கு காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்திய வங்கிகளில் மட்டும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பணம் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
67,000 கோடி வைப்பு – மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள்
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளதாவது, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 87 சதவீத பணம் உரிமை கோரப்படாமல உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் அதிக அளவிலான பணம் வைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- எஸ்பிஐ வங்கி – ரூ.19,239 கோடி
- பஞ்சாப் நேஷனல் வங்கி – ரூ.6,910 கோடி
- கனரா வங்கி – ரூ.6,278 கோடி
- பாங்க் ஆஃப் பரோடா – ரூ.5,277 கோடி
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – ரூ.5,104 கோடி
மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த வங்கிகளில் மட்டும் அதிக அளவிலான பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Home Loan : எவ்வளவு மாத சம்பளம் வாங்கினால் எவ்வளவு ரூபாய் வரை வீட்டு கடன் கிடைக்கும்?.. தெரிந்து கொள்ளுங்கள்!
தனியார் வங்கிகளில் மட்டும் ரூ.8,673 கோடி மதிப்புள்ள பணம் உரிமை கோரப்படாமல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.