Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புதிய வருமான வரி மசோதா – SIMPLE என்றால் என்ன?

Income Tax Bill Update: திருத்தப்பட்ட புதிய வருமானவரி மசோதா ஆகஸ்ட் 11, 2025 அன்று தாக்கல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமானவரி மசோதாவை அறிமுகப்படுத்தும்போது SIMPLE என்ற வார்த்தையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். அதுகுறித்து பார்க்கலாம்.

புதிய வருமான வரி மசோதா – SIMPLE என்றால் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Aug 2025 20:58 PM

கடந்த 1961 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட வருமானவரி சட்டத்திற்கு (Incometax Bill) மாற்றாக புதிய வருமானவரி மசோதாவை கடந்த பிப்ரவரி 13, 2025 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இதில் உள்ள பிழைகள் மற்றும் பொருத்தமற்ற காரணமாக அதனை புரிந்துகொள்வதில் சிக்கல் இருப்பதாக கூறி திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தது. அந்த வகையில் திருத்தப்பட்ட வருமான வரிமசோதா ஆகஸ்ட் 11, 2025 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்தார். மேலும் அவர் வருமானவரி மசோதாக தாக்கல் செய்யும் போது SIMPLE என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அது குறித்து பார்க்கலாம்.

S.I.M.P.L.E என்றால் என்ன?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரியில் மசோதாவை முதன்முதலாக சமர்ப்பிக்கும் போது, இதற்கான வழிகாட்டும் கொள்கைகளை S.I.M.P.L.E என்ற சுருக்கமாக விளக்கினார். அதாவது SIMPLE என்ற வார்த்தையில் உள்ள S என்பது Streamlined structure and language (ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு மற்றும் மொழி), I என்பது Integrated and concise (ஒருங்கிணைந்தது மற்றும் சுருக்கமானது), M என்பது Minimised litigation (வழக்குகள் குறைப்பு), L என்பது Learn and Adapt (கற்றல் மற்றும் புரிந்துகொள்ளுதல்) , E என்பது Efficient tax reforms (முக்கிய வரி சீர்த்திருத்தங்கள்) ஆகியவை ஆகும்.

புதிய வருமானவரி மசோதாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

தற்போது செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்களின் படி, 1961 வருமான வரி சட்டம் விதிகளை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுகள் குறித்து விவரங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டு சொத்து வருவாய் தொடர்பான குழப்பங்கள் நீக்கப்பட்டுள்ளன. Capital Asset மற்றும் Micro and Small Enterprises போன்ற சொற்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி செலவுக்கான வரிச்சலுகைகள் ஒத்திகை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

தற்போது வெளியான புதிய மாற்றங்களின்படி தாமதமாக வருமானவரி தாக்கல் செய்தாலும் வரி சலுகைகள் பெறலாம். தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தாலும் அபராதம் விதிக்கப்படாது. வரி செலுத்த வேண்டிய நிலை இல்லாதவர்கள் முன்கூட்டியே சான்றிதழ் பெறலாம்.மேலும் பழைய சட்டத்தில் காலியாக உள்ள வாடகை வீட்டின் வருமானம் Reasonable expected Rent அதாவது எதிர்பார்க்கப்பட்ட வாடகை என்ற அடிப்படையில் இருந்தது. தற்போது எதிர்பார்க்கப்பட்ட வாடகை மற்றும் உண்மையான வாடகை ஆகியவற்றில் எது அதிகமானதோ அதன் அடிப்படையில் அமைந்துள்ளது.