ஆபரேஷன் சிந்தூர்.. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடி இன்று உரை..
Operation Sindoor: 2025 ஜூலை 29ஆம் தேதியான இன்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மாலை 7 மணி அளவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவாக பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜூலை 29, 2025: நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் 2025 ஜூலை 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆபரேஷன் சிந்தூர், இந்தியா பாகிஸ்தான் மோதல் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட வந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 16 மணி நேரம் இந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க அனுமதி வழங்கப்பட்டது. 2025 ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய விவாதம் 2025 ஜூலை 29ஆம் தேதியும் தொடரும் என குறிப்பிடப்பட்டது. மேலும் மக்களவையில் 2025 ஜூலை 28ஆம் தேதியும், மாநிலங்களவையில் 2025 ஜூலை 29ஆம் தேதி விவாதங்கள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மக்களவையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் ஆப்ரேஷன் சித்தூர் குறித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அதாவது 2025 ஜூலை 29ஆம் தேதி மக்களவையில் ஆபரேஷன் சிந்து குறித்து விளக்கம் அளிப்பார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மாலை 7 மணி அளவில் உரையாற்றுவார் எனவும் தகவல் வெளியாக உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒன்பது பயங்கரவாத தளங்கள் தகர்க்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தொடர்ந்து வந்த மோதல் நடவடிக்கை இரு தலைவர்கள் சமரசம் எட்டப்பட்ட பின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.




மேலும் படிக்க: மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் – அமைதியாக இருந்த ராகுல் காந்தியால் சர்ச்சை!
இலக்கை எட்டியதால் தாக்குதலை நிறுத்தினோம் – அமைச்சர் ராஜ்நாத் சிங்
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரில் 2025 ஜூலை 29ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ நாட்டில் இறையாண்மையை பாதுகாக்கவும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மதத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: நமது இலக்கை எட்டியதால் தாக்குதலை நிறுத்தினோம்.. ராஜ்நாத் சிங் விளக்கம்!
இதனைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தி அதனை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் மறைமுக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. நமது நோக்கம் பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே நமது இலக்கை எட்டியதால் தாக்குதலை நிறுத்தினோம். யாருடைய அழுத்தத்தாலும் நிறுத்தப்படவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை:
இதனைத் தொடர்ந்து 2025 ஜூலை 29ஆம் தேதியான இன்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மத்திய உள்துறை அமைச்சர் நண்பகள் 12 மணி முதல் 1 மணி வரை இது தொடர்பாக பேச உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி மாலை 7 மணி அளவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவாக பேச உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.