Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாதுகாப்பான வருமானம் வேண்டுமா ? எல்ஐசியின் சிறந்த 5 பாலிசிகள்!

Best LIC Plans 2025 : பாதுகாப்பான, அதே நேரம் நிலையான வருமானம் பெற எல்ஐசி சிறந்த முதலீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை விரும்புகிறவர்களுக்கு எல்ஐசியின் சிறந்த 5 மூதலீட்டுத் திட்டங்களைப் இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

பாதுகாப்பான வருமானம் வேண்டுமா ? எல்ஐசியின் சிறந்த 5 பாலிசிகள்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Aug 2025 18:14 PM

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India) அவ்வப்போது மக்களுக்கு பயன்படும் வகையில் பல வகையான முதலீட்டுத் (Investment) திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பான, நிலையான வருமானத்தைப் பெற விரும்பினால், எல்ஐசியின் சில பாலிசிகள் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.  ஆபத்து குறைவான, அதே நேரம் சிறந்த வருமானத்தை அளிக்கும் திட்டங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு எல்ஐசியின் இந்த 5 சிறந்த பாலிசிகள் உங்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இவற்றில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு நிரந்தர வருமானத்தையும் பெறலாம். பாதுகாப்புடன் உங்கள் சேமிப்பை அதிகரிக்கும் எல்ஐசியின் 5 சிறந்த திட்டங்களைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

எல்ஐ ஜீவன் ஆனந்த் திட்டம்

குறைந்த பட்ஜெட்டில் சிறந்த ஆயுள் காப்பீட்டை நீங்கள் விரும்பினால், இந்தக் பாலிசி உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். நீங்கள் இதை ஒரு நாளைக்கு ரூ.45 அல்லது மாதத்திற்கு ரூ.1358 தவணையுடன் தொடங்கலாம். இந்த பாலிசி மூலம், எதிர்காலத்தில் ரூ.25 லட்சம் வரை சேமிப்பை உருவாக்கலாம். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச காலம் 15 ஆண்டுகள். இறுதியாக போனஸ் உடன் மிகப்பெரிய தொகை நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்க : மாதம் ரூ.20,000 முதலீட்டில் ரூ.7 கோடி லாபம் பெறலாம் – எப்படி தெரியுமா?

எல்ஐசி ஜீவன் ஷிரோமணி

இந்த திட்டம் குறிப்பாக நல்ல வருமானம் உள்ளவர்களுக்கும், பாதுகாப்புடன் சிறந்த வருமானத்தை விரும்புவோருக்கும் ஏற்றது.  இதில் முதலீட்டு காலம் குறைவானதாகவும், நன்மை நீண்ட காலம் கொண்டதாக இருக்கும்.  இதில், நீங்கள் ரூ.1 கோடி வரை காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்யலாம். இதில் நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப வருடத்திற்கு சுமார் ரூ 7.59 லட்சம் வரை பிரீமியம் செலுத்தலாம். பிரீமியம் காலம் 4 ஆண்டுகள்.  ஆனால் பலன் முழு 20 ஆண்டுகளுக்கும் கிடைக்கும்.

எல்ஐசி நியூ டிரஸ்ட் ஸ்கீம்

இந்தத் திட்டம் காப்பீட்டை விட முதலீட்டில் அதிக கவனம் செலுத்துபவர்களுக்கானது. இந்தத் திட்டத்தில், உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும், மேலும் போனஸும் கிடைக்கும். இது உங்கள் சேமிப்பைப் பாதுகாப்பான, குறைந்த ஆபத்துள்ள திட்டமாகும். உறுதியான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீட்டை நீங்கள் விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு ஏற்றது.

இதையும் படிக்க : மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான FD.. 8.5 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

எல்ஐசி ஜீவன் உமாங்

ஓய்வூதியத்திற்குப் பிறகும் வருமானம் பெற விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு சிறந்தகாகப் பார்க்கப்படுகிறது.. இந்தத் திட்டத்தில் பிரீமியத்தைச் செலுத்திய பிறகு, ஒவ்வொரு ஆண்டும் நிலையான 8% பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த வருமானத்தைப் பெறுவீர்கள். பாலிசிதாரர் இறந்தால், குடும்பத்திற்கு முழுமையான காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

எல்ஐசி ஜீவன் தருண்

உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது எதிர்கால நிதித் தேவைகள் குறித்து நீங்கள் கவலைப்பட்டால், இந்தத் திட்டம் குறிப்பாக உங்களுக்கானது. இந்தத் திட்டத்தில், குழந்தைக்கு 25 வயது வரை முதலீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில், 20 முதல் 25 வயது வரை, குழந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். இறுதியில் ஒரு மொத்தத் தொகையும் போனஸும் கிடைக்கும்.