SIP: மாதம் ரூ.20,000 முதலீட்டில் ரூ.7 கோடி லாபம் பெறலாம் – எப்படி தெரியுமா?
SIP Investment Insight: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிறிது சிறிதாக, பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டும் ஒரு சிறந்த திட்டமாக சிப் கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தில் மாதம் ரூ.20,000 முதலீடு செய்தால், ரூ.7 கோடி லாபம் எப்படி கிடைக்கும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP – Systematic Investment Plan) என்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிறிது சிறிதாக, பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டும் ஒரு சிறந்த திட்டமாகும். சிறிய தொகையை முதலீடு செய்து, பெரிய இலக்கை அடையலாம் என்பதற்கு சிப் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது. இந்த திட்டத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை நாள், மாதம் அல்லது வாரம் என நமக்கு விருப்பமான முறையில் தொடர்ச்சியாக முதலீடு செய்வதன் மூலம், நமது பணம் நிலையாக வளரும். அந்த வகையில், மாதம் ரூ.20,000 முதலீடு செய்தால், ரூ.7 கோடி லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சிப் திட்டம் எப்படி செயல்படுகிறது?
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறிப்பிட்ட தொகையை மாதம், அல்லது வாரம் என நமக்கு விருப்பமான முறையில் தொடர்ந்து முதலீடு செய்வார்கள். இந்த தொகை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் நிரந்தரமாகவும், கட்டுப்பாடோடும் முதலீடு செய்யும் பழக்கம் உருவாகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு நமக்கு பெரிய தொகையாக மாறும். இது எதிர்காலத்தில் நமக்கு ஏற்படும் நிதி தேவைகளை இந்த திட்டம் பூர்த்தி செய்கிறது.
இதையும் படிங்க : ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு வட்டி மட்டுமே ரூ.10 லட்சம்.. 3 மடங்கு லாபம் தரும் சூப்பர் திட்டம்!




மாதம் ரூ.20,000 முதலீடு செய்தால் எப்படி ரூ. 7 கோடி கிடைக்கும்?
இந்த திட்டதில் ஒருவர் மாதம்தோறும் ரூ.20,000 முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு லாபமாக 12 சதவிகிதம் கிடைக்கும் பட்சத்தில் 10 ஆண்டுகளில் நாம் முதலீடு செய்த தொகை ரூ.24,00,000 மற்றும் கிடைத்த லாபம் ரூ.20,80,718 சேர்த்து மொத்தமாக ரூ.44,80,718 கிடைக்கும். இதே நிலை தொடரும் பட்சத்தில் 32 ஆண்டுகளில் நாம் முதலீடு செய்த தொகை, ரூ.72,80,000 ஆகவும் அதன் மூலம் கிடைக்கும் லாபம் ரூ.7,01,56,755 கிடைக்கும். இதற்கு பொறுமையும் நிலைத்தன்மையும் அவசியம்.
இந்த திட்டத்தி ல் ஆண்டுக்கு 12 சதவிகிதம் வரை லாபம் கிடைத்தால் ரூ. 7 கோடி அடைய 32 ஆண்டுகள் ஆகும். இதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நிலையான முதலீடும் பொறுமையும் இருந்தால் சிறிய முதலீட்டில் கோடிக்கணக்கில் லாபம் பெறலாம்.
இன்றைய காலத்தில் பணத்தைச் சேமிப்பது மட்டும் போதாது. அதை லாபமாக மாற்றும் வழிகளையும் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். சிப் என்பது அதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது. சிறிய தொகையை முதலீடு செய்து நீண்ட காலத்தில் பெரும் செல்வத்தை உருவாக்க விரும்பும் அனைவருக்கும் சிப் என்பது ஒரு சிறந்த வாய்ப்பு.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9 Tamil பொறுப்பேற்காது.)