AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SIP: 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் சேமிப்பது எப்படி ? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

SIP Investment Guide: குறுகிய காலக்கட்டத்தில் பணம் தேவைப்படுவோருக்கு சிப் (SIP) என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த கட்டுரையில் சிப் திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் ரூ.20,00,000 என்ற இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

SIP: 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் சேமிப்பது எப்படி ? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Jun 2025 15:56 PM IST

திருமணம், வீடு வாங்க, அல்லது வெளிநாட்டு பயணத்திற்கு திட்டமிடுவது போன்ற குறுகிய கால நிதி இலக்குகளை அடைவது பெரும்பாலும் சவாலாக இருக்கும். ஆனால், ஒழுங்கான நிதி திட்டமிடலுடன், மாதம் மாதமாக சிறு தொகைகளை முதலீடு செய்வதன் மூலம் சவாலை எளிதில் சமாளிக்க முடியும். குறிப்பாக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan) முறையில் ரூ.20 லட்சம் வரை சேமிக்க முடியும். எஸ்ஐபி (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட்களில் (Mutual Funds) மாதம் ஒரு நிலையான தொகையை முதலீடு (Investment) செய்வதற்கான ஒரு திட்டமாகும். ஒரு பெரிய தொகையை ஒரே தடவை முதலீடு செய்ய வேண்டிய கவலையின்றி, ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் அதிகமான பணம் சேமிக்க முடியும். இது காம்பவுண்டிங் (compounding) போன்ற நன்மைகளால் நம் பணம் வளர்ச்சியடைந்தபடி இருக்கும். இந்த நிலையில் 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் சேமிப்பது எப்படி என என்டிடிவி பிராஃபிட்டில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் பார்க்கலாம்.

20 லட்சம் இலக்கை அடைய எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

நாம் குறிக்கோளாக ரூ.20 லட்சம் சேமிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நாம் 5 ஆண்டுகளில் மாதம் ரூ. 24,300 என்ற அளவில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் முதலீடு செய்யும் பணம் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதம் என்ற அளவில் வளரும். இது ஒரு உதாரணம் மட்டுமே. நம் தேவைக்கும் பொறுமைக்கும் ஏற்ப திட்டமிடலாம். குறிப்பாக நம் இலக்கை பொறுத்து மாதம் சேமிக்கும் தொகையையும் மாற்றிக்கொள்ளலாம். இது மற்ற முதலீட்டு திட்டங்களைக் காட்டிலும் பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.

எந்த வகை திட்டங்களைத் தேர்வு செய்வது?

  • அதிக வருமானம் தேடும் பெற,  ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் ஏற்றது. 5 வருடம் என்ற குறுகிய காலக்கட்டத்துக்கு ஏற்ப லார்ஜ்-கேப் (Large-cap funds) அல்லது டைவர்சிஃபைடு ஃபண்ட்கள் (Diversified Funds) சரியானவை.
  • நாம் எடுக்கும் ரிஸ்க்கிற்கு ஏற்றபடி லாபம் பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஹைப்ரிட் ஃபண்ட்கள் சிறந்தவை.
  • பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோர் அல்லது 1 அல்லது 2 ஆண்டுகள் என்ற குறுகிய காலமே உள்ளது போது டெப்ட் ஃபண்ட்கள் (Debt Funds) சரியானவையாக இருக்கும்.

மேலும் ரூ.24,000 முதல் ரூ.25,000 மாதம் முதலீடு செய்வது சற்று கடினமாக இருந்தால், ஸ்டெப் அப் சிப்(Step-up SIP) என்பதை தேர்வு செய்யலாம். இதன் மூலம் முதலில் குறைந்த தொகையிலேயே துவங்கி, ஆண்டுதோறும் உங்கள் வருமானம் அதிகரிக்கும்.

இலக்கை அடைய செய்ய வேண்டியவை

  • சிப் திட்டத்தில் பணம் செலுத்தும் முறையை ஆட்டோமேட் செய்யுங்கள். இதன் மூலம் தவறாமல் மாதம்தோறும் நம் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தப்படும்.

  • குறைந்தபட்சம் வருடம் ஒருமுறையாவது நீங்கள் தேர்வு செய்த ஃபண்ட்கள் சரியாக செயல்படுகிறதா என்று பாருங்கள்.

  • மார்க்கெட்டில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் சிப் திட்டத்தை நிறுத்த வேண்டாம், காரணம் இது நீண்ட காலத்தில் நன்மை தரும்.

  • சரியான திட்டமிடல் இருந்தால், மாத பட்ஜெட் பாதிக்காது.

ஒரு சரியான திட்டமிடல் மற்றும் ஒழுங்கான முதலீடு பழக்கத்துடன், 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் சேமிப்பது சாத்தியமே. சிப் திட்டத்தின் மூலமாக நீங்கள் பயமின்றி, சுலபமாக பணத்தை சேமிக்க முடியும். நாம் வாங்கும் வருமானத்துக்கு ஏற்ப இந்த முறையை பயன்படுத்தி நிதி இலக்குகளை எளிதில் அடையலாம்.

Follow Us