Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கடன் வாங்குவதில் சிக்கலா? இந்த எளிய வழிகளை டிரை பண்ணுங்க!

Credit Score: தற்போதைய காலகட்டத்தில் கடன் வாங்குவது இயல்பான நடைமுறையாக மாறிவருகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நமக்கு கடன் வழங்குவதில் கிரெடிட் ஸ்கோர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிரெடிட் ஸ்கோர் இல்லாதவர்கள் எப்படி கடன் பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கடன் வாங்குவதில் சிக்கலா? இந்த எளிய வழிகளை டிரை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Aug 2025 16:35 PM

இன்றைய காலகட்டத்தில் கடன் (Loan) வாங்குவது மிகவும் சாதாரண நடைமுறையாகி விட்டது. பலரும் தங்களின் அவசர தேவைகளுக்கு, வீடு கட்ட, வாகனம் வாங்க போன்ற தேவைகளுக்கு கடன் வாங்குகின்றனர். இதற்கு மாதத் தவணையாக நம் கடனை திருப்பி செலுத்த முடியும் என்பது கூடுதல் நன்மையாக இருக்கிறது. இந்த நிலையில் நம் கடன் வாங்கும் தகுதியை நிர்ணயிப்பது கிரெடிட் ஸ்கோர் (Credit Score). இதற்கு முன் வாங்கிய கடனை நாம் எப்படி செலுத்தியிருக்கிறோம் என்பதை இந்த கிரெடிட் ஸ்கோர் சொல்லும். இதனை அடிப்படையாக வைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நமக்கு கடன் வழங்குவதா வேண்டாமா என தீர்மாணிக்கும். ஆனால் சிலர் கடனை சரியாக அடைத்தும் கிரெடிட் ஸ்கோரில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் ஸ்கோர் எதற்காக முக்கியம்?

உங்கள் நிதி நிலையை நிர்ணயிக்க கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக நீங்கள் புதிதாக கடன் வாங்கவோ அல்லது கிரெடிட் கார்டு வாங்கவோ விண்ணப்பிக்கும்போது வங்கிகள் மற்றும் நதி நிறுவனங்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சோதிக்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் உங்களால் கடனை அடைக்க முடியும் என அந்நிறுவனம் நம்பும். அதே நேரம் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், உங்களால் கடனை திருப்பி செலுத்த முடியாது என நினைத்து கடன் கோரிக்கையை நிராகரிக்க முடியும்.

இதையும் படிக்க : தனிநபர் கடன் Vs தங்க நகை கடன்?.. இந்தியாவில் நிதி தேவைக்கு எது சிறந்தது?

சிலர் தங்கள் வாழ்க்கையில் கடனே வாங்கியிருக்க மாட்டார்கள், மேலும் கிரெடிட் கார்டுகளை கூட பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்கள் கடன் வாங்க முயற்சிக்கும்போது சிக்கல் ஏற்படலாம். குறிப்பாக மாதத் தவணையில் ஏதாவது பொருட்கள் வாங்க விரும்பினால் கூட அவர்களுக்கு சிக்கல் ஏற்படும். ஏனெனில் அவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இல்லாததால் கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தயங்கும். இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிக்க : அவசர கடன் வேண்டுமா? ஆதார், பான் கார்டு மட்டும் போதும் – உடனடி கடன் பெறும் புதிய டிஜிட்டல் வசதி!

கிரெடிட் ஸ்கோரை உருவாக்குவது எப்படி?

  •  வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் வைத்திருந்தால் அதன் மூலம் கிரெடிட் கார்டு பெறலாம். மேலும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி, அதற்கான பில்லை மாதம் தவறாமல் செலுத்தும் பட்சத்தில் நம் பெயரில் கிரெடிட் ஸ்கோர் உருவாகும்.
  • சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் சிறிய தொகையை பெர்சனல் லோனாக வழங்குகின்றன. மேலும் மொபைல், லேப்டாப் போன்றவற்றுக்கு மாதத் தவணையை வழங்குகின்றன. அதனைப் பெற்று மாதத் தவணை சரியாக செலுத்தம் பட்சத்தில் நமக்கு கிரெடிட் ஸ்கோர் உருவாகும்.
  • நல்ல கிரெடிட் ஸ்கோர் வரலாறு உள்ள நபருடன் இணைந்து, துணை விண்ணப்பதாரராக கடன் பெறலாம். அந்த கடனை சரியாக செலுத்தும் பட்சத்தில் நமக்கு கிரெடிட் ஸ்கோர் உருவாகும்.

கிரெடிட் ஸ்கோர் வரம்பு

கிரெடிட் ஸ்கோர் வரம்பு நம் கடனை திருப்பி செலுத்தும் முறையை வைத்து 300 முதல் 900 வரை இருக்கும். ஒரு நபருக்கு 750க்கு மேல் ஸ்கோர் இருந்தால் அது நல்ல கிரெடிட் ஸ்கோராக கருதப்படும். அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் பெறும் வாய்ப்பும் நல்ல வட்டி விகிதமும் எளிதாக கிடைக்கும்.