டேக்ஸ் செலுத்தும் நபரா நீங்கள்.. அதிகரிக்கும் வருமான வரி தாக்கல் மோசடி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
Income Tax Scam Alert | இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025 கடைசி தேதியாக உள்ள நிலையில், வருமான வரி செலுத்தும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வருமான வரி தாக்கலை மையப்படுத்தி புதிய மோசடி அரங்கேறி வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) காரணமாக மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக காலத்திற்கு ஏற்ப மோசடிகள் நடைபெறுவது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. தற்போது இந்தியாவில் பொதுமக்கள் வருமான வரி செலுத்தி வரும் நிலையில், அது தொடர்பான மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வருமான வரி (Income Tax) என்ற பெயரை பயன்படுத்தி வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு போலி போன் கால்கள் மற்றும் இமெயில்கள் வருகின்றன. எனவே அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருமான வரி செலுத்துவதை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல்கள்
இந்தியாவில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரி செலுத்தும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல்கள், மோசடிகளில் ஈடுபடுகின்றனர். வருமான வரித்துறை அதிகாரி அல்லது இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி என கூறும் மோசடிக்காகரர்கள் வரி செலுத்தும் நபர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி அதன் மூலம் மோசடி செய்கின்றனர்.
இதையும் படிங்க : ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள்?.. உண்மை இதுதான்!
மோசடி எப்படி நடைபெறுகிறது?
போன் கால்கள், இமெயில், வாட்ஸ்அப் வீடியோ கால், ஆடியோ கால் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் மோசடிக்காகரர்கள் வரி செலுத்தும் நபர்களை தொடர்புக்கொள்கின்றனர். அவ்வாறு தொடர்புக்கொள்ளும் மோசடிக்காரர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், வரி விதி மீறல் தொடர்பாக தொடர்புக்கொள்வதாகவும் கூறுகின்றனர். பொதுமக்கள் அதனை நம்பும் வகையில் போலி ஐடி கார்டுகள் மற்றும் அவணங்களை அவர்கள் தயார் செய்து வைத்துள்ளனர். பல சம்பவங்களில் பொதுமக்களை தொடர்ப்புக்கொள்ளும் மோசடிக்காரர்கள் வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி ஆகியவற்றை பகிர சோல்லி மிரட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : தனிநபர் கடன் Vs தங்க நகை கடன்?.. இந்தியாவில் நிதி தேவைக்கு எது சிறந்தது?
மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
- வரி செலுத்தும் நபர்களுக்கு இதுபோன்ற ஏதேனும் போன் கால்கள், குறுஞ்செய்தி அல்லது வீடியோ கால் வந்தால் மிகவும் நிதானமாக இருக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
- ஏதேனும் குறுஞ்செய்திகள் வந்தால் அது வருமான வரித்துறையின் உண்மையான மின்னஞ்சல் முகவரியில் இருந்து வந்துள்ளதா என்பதை வருமான வரித்துறையின் இணையதளம் மூலம் சோதனை செய்யுங்கள்.
- அறிமுகம் இல்லாத, சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள் வந்தால் அவர்களிடம் தனிப்பட்ட மற்றும் முக்கிய தகவல்களை பகிராதீர்கள்.
வருமான வரித்துறை தாக்கல் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றும்படி அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.