Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாத சம்பளம் சட்டுனு கரையுதா? 50-30-20 ஃபார்முலா இனி ஃபாலோ பண்ணுங்க!

50/30/20 Rule to Manage Finance | பெரும்பாலான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக ஓடி ஓடி உழைத்தாலும் அவர்களுக்கு எப்படியாவது நிதி சிக்கல்கள் ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையில் தான், வருமானத்தை சீராக பயன்படுத்தி நிதி பாதுகாப்பை மேம்படுத்த உதவும் முக்கிய விதி குறித்து பார்க்கலாம்.

மாத சம்பளம் சட்டுனு கரையுதா?  50-30-20 ஃபார்முலா இனி ஃபாலோ பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Sep 2025 14:20 PM IST

பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக ஏதேனு ஒரு வேலை செய்து வருமானம் ஈட்டுகின்றனர். என்னதான் வருமான ஈட்டினாலும், பலரும் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் முறையான திட்டமிடல் இல்லாததே. முறையான திட்டமிடல் இல்லையென்றால் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், நிதி சிக்கல்கள் மற்றும் பற்றக்குறை ஏற்படுவது தொடர்கதையாகிவிடு. எனவே, நிதி பாதுகாப்பை மேம்படுத்த உதவும் 50-30-20 முறையை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது என்ன முறை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிதி பாதுகாப்பை மேம்படுத்த உதவும் 50-30-20 விதி

ஒவ்வொருவரும் தங்களது மாத வருமானத்தை மூன்று பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். அதாவது 50, 30 மற்றும் 20 என்ற அளவுகோலில் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் 50 சதவீதத்தை தங்களது அத்தியாவசிய செலவுகளுக்காக பயன்படுத்த வேண்டும். 30 சதவீதத்தை தங்களது தனிப்பட்ட மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பயன்படுத்த வேண்டும். பிறகு மீதமுள்ள 20 சதவீதத்தை கட்டாயம் சேமிப்புக்காக பயன்படுத்த வேண்டும். இந்த முறையை பயன்படுத்தி ஒருவர் தனது வருமானத்தை கையாளும்போது நிதி பாதுகாப்பை கட்டாயம் மேம்படுத்த முடியும்.

இதையும் படிங்க : Post Office: தினமும் ரூ.411செலுத்தினால்… ரூ.43 லட்சம் சம்பாதிக்கலாம்… தபால் நிலைய சூப்பர் திட்டம்

50 சதவீதம் – அத்தியாவசியம்

மாத வருமானம் ஈட்டும் நபர் தனது அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் இந்த 50 சதவீதத்திற்குள் அடக்க வேண்டும். அதாவது வீட்டு வாடகை, கடன், மளிகை செலவு, காய்கறி, மின்சாரம், குடிநீர், செல்போன் கட்டணம் ஆகியவற்றை இதற்கு கீழ் கொண்டு வர வேண்டும். உதாரணமாக ஒருவர் மாதம் ரூ.40,000 வருமானம் ஈட்டுகிறார் என்றால் அந்த நபர் அதில் இருந்து ரூ.20,000-த்தை அத்தியாவசிய தேவைகளுக்காக ஒதுக்க வேண்டும்.

30 சதவீதம் – பொழுதுபோக்கு

அன்றாடம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேலைக்கு ஓடிக்கொண்டே இருக்கும் பொதுமக்கள் ஓய்வு அல்லது பொழுதுபோக்கிற்காக சிறிது அளவு பணம் செலவு செய்ய வேண்டும். இது தவிர உடைகள், காலணிகள் இத்தைய பொருட்களை வாங்கவும் பணம் தேவைப்படும். எனவே ரூ.40,000 மாத சம்பளம் வாங்கும் நபர் 30 சதவீதமான ரூ.12,000-த்தை பொழுதுபோக்கு மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம் – மாதம் ரூ.5,550 பெறும் வாய்ப்பு – எப்படி முதலீடு செய்வது?

20 சதவீதம் – சேமிப்பு

இதுதான் மிகவும் முக்கியமான முறையாகும். ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் இதில் தான் தவறு செய்கின்றனர். அதாவது அவர்கள் சேமிப்புக்காக எதையுமே எடுத்து வைப்பதில்லை. எனவே மாதம் சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரும் தங்களது மாத ஊதியத்தில் இருந்து 20 சதவீதத்தை சேமிக்க வேண்டும். அதாவது மாதம் ரூ.40,000 வருமான ஈட்டும் நபர், ரூ.8,000 சேமிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.