சிறு வணிகர்கள் ரூ.90,000 வரை கடன் பெறலாம் – மத்திய அரசின் திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?
PM Svanidhi Yojana : சிறு குறு தொழில்களின் வளரச்சிக்கு உதவும் விதமாக மத்திய அரசு பிரதம மந்திரி ஸ்வாநிதி யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

சிறு, குறு தொழில்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைக்கும் பணியை திறம்பட செய்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு சிறு வணிகர்களைக் ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு பல அதிரடி திட்டங்களை அறிவித்திருக்கிறது. அதில் ஒரு திட்டம் தான் பிரதம மந்திரி ஸ்வாநிதி யோஜனா (PM Svanidhi Yojana) திட்டம். இந்த திட்டம் கடந்த ஜூன் 1, 2020 அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்ட்டது. இதன் மூலம் ஏராளமான சிறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு சிறிய தொகை வணிகர்களுக்கு கடனாக (Loan) கிடைக்கும். எந்த பிணையும் பாதுகாப்பும் இல்லாமல் ரூ.90,000 வரை கடன் பெறலாம்.
இதன் மூலம் தொழில் துவங்க முதலீடு இல்லை என கவலையில் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் கைகொடுக்கும். அல்லது நிறுவனத்தை விரிவுபடுத்த பணம் இல்லாமல் தயங்குபவர்களுக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். ஆரம்பத்தில் எந்த பினையும் இல்லாமல் ரூ.80,000 வரை கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது கூடுதலாக ரூ.90,000 வரை கடன் பெறலாம். இந்த திட்டம் மார்ச் 31, 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஏடிஎம் முதல் யுபிஐ சேவை வரை… நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் என்ன?




மூன்று தவணைகளில் கடன்
புதிய விதிகளின் படி இந்த ஸ்வாநிதி யோஜனாவின் கீழ் மூன்று தவனைகளின் கீழ் கடன் பெறலாம். முதல் தவணை தற்போது ரூ.15, 000 ஆக வழங்கப்படும். முன்னதாக இது ரூ.10,000 ஆக இருந்தது. இரண்டாவது தவணை ரூ.25,000 ஆக வழங்கப்படும். மூன்றாவது தவணையாக ரூ.50,000 வழங்கப்படும்.
மொத்த ரூ. 90,000 கடனைப் பெற, பயனாளிகள் முதல் மற்றும் இரண்டாவது தவணைகளை முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும். முதல் தவணை ரூ. 15,000 திருப்பிச் செலுத்திய பிறகு, இரண்டாவது தவணை ரூ. 25,000 கிடைக்கும். மேலும், இரண்டாவது தவணையைச் செலுத்திய பிறகு, மூன்றாவது தவணை ரூ. 50,000 கிடைக்கும். இந்த வழியில், ஒரு சிறு தொழில் தொடங்க கடன் பெறலாம். கடனை முறையாக செலுத்தினால், அதை மீண்டும் பெற வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். கடனை தவணை முறையில் செலுத்தலாம்.
இதையும் படிக்க : தீபாவளி பரிசு.. முன்கூட்டியே வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. முக்கிய தகவல்!
அதாவது, கடனை 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். திட்டத்தின் கீழ் கடன் பெற, வணிகர்கள் தங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி அரசு வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்குப் பிறகு, உங்கள் கடன் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
பிரதான் மந்திரி ஸ்வாநிதி யோஜனா இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். உங்கள் ஆதார் எண் உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது e-KYC சரிபார்ப்பு இருக்கும். மேலும், கடன் வாங்குபவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் நான்கு வகை வர்த்தகர்கள் மட்டுமே கடனுக்குத் தகுதியுடையவர்கள். பிரதான் மந்திரி ஸ்வாநிதி யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் ஆன்லைனில் அல்லது பொது சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள் (SFBs) மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் நடைமுறையில் உள்ள விகிதங்களின்படி மாறலாம்.