Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO 3.0 : ஏடிஎம் முதல் யுபிஐ சேவை வரை… நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் என்ன?

EPFO 3.0 Launch 2025 : இந்தியாவில் இபிஎஃப்ஓ 3.0 விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இதில் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் முறையில் இருந்து யுபிஐ சேவை வரை பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம் .

EPFO 3.0 : ஏடிஎம் முதல் யுபிஐ சேவை வரை… நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Aug 2025 16:32 PM

இந்தியாவில் ஊழியர்களின் ஓய்வு காலத்தில் அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் வருங்கால வைப்பு நிதி. இது பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் (EPFO) நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் படி பணியாளர்கள் ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும் அதற்கு நிகரான தொகையை நாம் வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும். இவை நம் கணக்கில் வரவு வைக்கப்படும். நாம் ஓய்வுபெறும்போதோ, அல்லது அவசர தேவைகளுக்கோ இந்த தொகையை எடுத்து பயன்படுத்தலாம். 

இந்த நிலையில் இந்தியாவின் 8 கோடி பிஎஃப் உறுப்பினர்களுக்கான முக்கியமான மாற்றங்களை கொண்டு வரும் இபிஎஃப்ஓ 3.0 விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய டிஜிட்டல் தளத்தை இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வருகின்றன.

இதையும் படிக்க : இனி இந்த சேவைக்கு முக அடையாள சரிபார்ப்பு அவசியம் – நடைமுறைக்கு வரும் புதிய விதி

இபிஎஃப்ஓ 3.0வின் முக்கிய அம்சங்கள்

  • இந்த புதிய இபிஎஃப்ஓ 3.0 அதன் பயனர்களுக்கு பல முக்கிய சேவைகளை வழங்கவிருக்கிறது.
  • ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி. உறுப்பினர்கள் தங்கள் யுஏஎன் (UAN) மற்றும் ஆதாரை வங்கி கணக்குடன் இணைப்பதன் வழியாக ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும்.
  • யுபிஐ மூலம் பிஎஃப் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது அவசர காலங்களில் உடனடியாக நம் பணத்தை பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
  • உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் தகவல்களை திருத்திக்கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிளைம் நிலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். ஓடிபி மூலம் இந்த சேவையை நாம் பெற முடியும்.
  • மொபைலில் இருந்து கூட இபிஎஃப்ஓ தளத்தை அணுகக்க கூடிய வகையில் இணையதளம் வடிவமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளை எப்போது வேண்டுமானாலும் பரிசோதிக்க முடியும்.

இதையும் படிக்க : ஊழியர்களின் பிஃஎப் கணக்கில் நிறுவனங்கள் எப்படி பங்களிக்கின்றன? விவரம் இதோ!

முதலில் இந்த இபிஎஃப்ஓ 3.0 ஜூன், 2025 வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் தொழில்நுட்ப பிரச்னைகளின் காரணமாக சில தாமதங்களை சந்தித்துள்ளது. விரைவில் அது சரி செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஃப்ஓ பயனர்களின் வேலைகளை எளிமையாக்க டிஜிட்டல் முறையில் பலமாற்றங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன. இதன் மூலம் உறுப்பினர்கள் பிஎஃப் பணத்தை விரைவாகவும் எளிதாகவும் பெற முடியும். குறிப்பாக அவசர காலங்களில் ஏற்படும் நிதி சிக்கலை தவிர்க்க, பயனர்கள் பிஎஃப் பணத்தை எடுத்த பயன்படுத்த இந்த திட்டம் ஏதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.