Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக அதிகரிப்பு – கணிப்புகளை பொய்யாக்கி சாதனை

India GDP Update: இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நிபுணர்கள் 6.5 சதவிகிதம் முதல் 7 சதவிகிதமாக இருக்கும் என கணித்த நிலையில், தற்போது வெளியான தகவல் அவர்களின் கணிப்பை பொய்யாக்கியுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக அதிகரிப்பு – கணிப்புகளை பொய்யாக்கி சாதனை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Aug 2025 19:21 PM

இந்தியாவில் முதல் காலாண்டு ஜூன் 30, 2025 அன்றுடன் நிறைவடைந்த நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)  7.8 சதவிகிதமாக  வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO)  தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் ஆகஸ்ட் 29, 2025 அன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவலை பகிர்ந்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி  பெரும்பாலும் 6.5 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை இருக்கும் என நிபுணர்கள் கணித்த நிலையில் அதனை மீறி இந்தியாவின் வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருந்துள்ளது. இது உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்திருப்பதை காட்டுகிறது.

கடந்த ஆண்டை விட அதிகம்

இந்தியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருந்தது. தற்போது அதனை விட 1.3 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு 4வது காலாண்டில் இறுதியாக உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருந்துள்ளது. தற்போது வெளியான தகவலின் படி, இந்த ஆண்டு 4வது காலாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : ‘வாருங்கள்.. இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்த ஆண்டு முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.47.89 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.  இதே நிலையில் கடந்த ஆண்டு முதல் காலாண்டில் ரூ.44.42 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முதல் காலாண்டின் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உண்மையான விலை ரூ.44.64 லட்சம் கோடியாகவும், சந்தை மதிப்பு ரூ.78.64 லட்சம் கோடியாகவும் இருக்கிறது.

இதையும் படிக்க : ஒரு லிட்டர் பெட்ரோலில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?

துறை வாரியாக வளர்ச்சி

  • விவசாயம் மற்றும் அது சாரந்த துறைகளின் வளர்ச்சி முதல் காலாண்டில் 3.7 சதவிகிதமாக உள்ளது.
  • தொழில்துறையை பொருத்தவரை உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
  • கட்டுமான பொருட்களின் வளர்ச்சி 7.6 சதவிகிதமாக உள்ளது.
  • சுரங்கத் தொழில் மற்றும் குவாரி தொழில் உற்பத்தி 3.1 சதவிகிதமாக இருக்கிறது.
  • மின்சாரம், எரிவாயு போன்ற துறைகளில் 0.5 சதவகிதம் வளர்ச்சி உள்ளது.
  • சேவை துறையில் உற்பத்தி அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த காலாண்டில் அதன் உற்பத்தி 9.3 சதவிகிதமாக உள்ளது. கடந்த ஆண்டில் முதல் காலாண்டில் 6.8 சதவிகிதமாக இருந்தது.

இந்தியாவில் முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி  வளர்ச்சி 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சேவை துறையில் அதிகரித்து வரும் வளர்ச்சி, தொழில்துறையின் மேம்பாடு, முதலீட்டு உயர்வு ஆகியவற்றின் விளைவாக உற்பத்தி அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.  அடுத்தடுத்த காலாண்டுகளிலும் இந்த வளர்ச்சி தொடரும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.