2026 பொங்களுக்கு ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கும் அரசு?.. தீயாக பரவும் தகவல்!
2026 Pongal Gift | தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும். இந்த பொங்கல் பரிசு ரூ.500, ரூ.1000 என வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசுடன் (Pongal Gift) பணமும் வழங்கும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது ரூ.1,000 அல்லது ரூ.500 வழங்கப்படும் நிலையில், 2026-ல் ரூ.5,000 வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசு குறித்து வெளியான இந்த தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 பொங்கலுக்கு ரூ.5,000 பரிசு? – வெளியான முக்கிய தகவல்
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை பரிசாக ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களை மேலும் மகிழ்ச்சியூட்டும் விதமாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.5,000 பணம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : GST : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!




தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்க ரூ.10,000 கோடி நிதி தேவைப்படும் என்றும், எனவே அதற்கான நிதி ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிதித்துறையை அரசு வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அனைவருக்கும் ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கும் நோக்கில் அரசு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பொங்கல் பரிசு திட்டம் தொடங்கப்பட்டது எப்போது
தமிழகத்தில் முதன் முறையாக 2006 – 2011 காலக்கட்டத்தில் திமுக ஆட்சியின் போது இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பொங்கல் செய்வதற்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.100 பணம் வழங்கியது. அதற்கு அடுத்த ஆட்சியில், அதாவது 2016 – 2021 காலக்கட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகையை ரூ.1,000 ஆக அதிமுக அரசு உயர்த்தியது.
இதையும் படிங்க : IRCTC: இனி ரயிலில் அதிக லக்கேஜ் கொண்டு போக முடியாது.. வரும் புது ரூல்ஸ்!
இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 2025 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. பணம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரூ.5,000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.