ஜிஎஸ்டி குறைப்பு குறித்து வரவுள்ள முக்கிய அறிவிப்பு.. டிவி, ஏசி விலை குறையுமா?
GST Changes | தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வரும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஜிஎஸ்டி குறைக்கப்படும் பட்சத்தில் ஏசி மற்றும் டிவி விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர்.

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி (GST – Goods and Services Tax) விதிப்பு முறைகளில் முக்கிய மாற்றம் வர உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஜிஎஸ்டியில் ஏற்பட உள்ள இந்த முக்கிய மாற்றம் காரணமாக ஏசி மற்றும் டிவி விலை குறையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள் காரணமாக ஏசி மற்றும் டிவி விலை குறையுமா?, அது குறித்து வணிகர்கள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகளில் முக்கிய மாற்றம் – பிரதமர் அறிவிப்பு
ஆகஸ்ட் 15, 2025 அன்று இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகளில் முக்கிய மாற்றம் வர உள்ளதாக அறிவித்தார். அது சாதரன மக்கள் மீதான வரி சுமையை குறைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : GST : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!




ஏசி, டிவிகளின் விலை குறையுமா?
ஜிஎஸ்டி வரி விதிப்பில் முக்கிய மாற்றம் வரும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், ஏசி மற்றும் டிவியின் விலை குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டியில் வரவுள்ள இந்த முக்கிய மாற்றம் காரணமாக ஏசி விலை 6 முதல் 7 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர். இந்த விலை குறைப்பு பொதுமக்களை பிரீமியம் மாடல்களை வாங்க தூண்டும் என்றும், இதன் மூலம் துறை ரீதியிலான வளர்ச்சி இருக்கும் என்றும் வணிகர்கள் கூறுகின்றனர். உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏசி நுகர்வு மிக குறைந்த அளவு உள்ளது. அதாவது 9 முதல் 10 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. எனவே ஜிஎஸ்டி குறைப்பு மூலம் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 2050 ஆம் ஆண்டு ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? 5 சிறந்த பாதுகாப்பான முதலீட்டு வழிகள் இதோ
ஏசிகளுக்கு மட்டுமன்றி டிவிகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக 32 இச்ன்களுக்கு மேல் உள்ள டிவிகளின் விலை 28 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக வணிகர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.