Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீபாவளி பரிசு.. முன்கூட்டியே வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. முக்கிய தகவல்!

Kalaignar Magalir Urimai Thogai | ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், நபம்பர் 12, 2025 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த ஆண்டு முன்கூட்டியே பணம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளி பரிசு.. முன்கூட்டியே வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Aug 2025 23:33 PM

தமிழகத்தில் பெண்களுக்கு பயனளிக்கும் ஒரு மிக சிறந்த திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) உள்ளது. இந்த திட்டத்தில் ஏற்கனவே கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெறும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

திமுக அரசின் அசத்தல் திட்டமாக இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் மொத்தம் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில்,  மீதமுள்ள தகுதியான மகளிருக்கு மகளிர்  உரிமைத் தொகை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்ட அதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை சுமார் 11 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : திருமணத்தில் வழங்கப்படும் மொய் பணத்துக்கு வரி செலுத்தணுமா? உண்மை என்ன?

முன்கூட்டியே வரவு வைக்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும். ஆனால், நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த மாதம் முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படு நாளான 15 ஆம் தேதி விடுமுறையாக இருந்தால் அதற்கு முந்தைய நாளே பணம் வரவு வைப்படும். இந்த நிலையில் நவம்பர் 12, 2025 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதையும் படிங்க : பெற்றோர் அனுப்பும் பணத்துக்கு வரி செலுத்தணுமா? உண்மை என்ன?

இந்த தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் கழித்து 15 ஆம் தேதி வருகிறது. எனவே மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்குவது பொதுமக்களின் பண்டிகை செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அரசு கருதுகிறது. இதன் காரணமாக நவம்பர் 2025-ல் வழக்கத்திற்கு மாறாக 10 ஆம் தேதியே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இருப்பு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.