Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியாவின் வோல்டேஜ் சிக்கல் – தொழில் வாய்ப்பாக மாற்றிய இளைஞர் – வி- கார்டு நிறுவனம் ஜெயித்த கதை!

Turning Challenges Into Opportunities : இந்தியாவில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றை சரியாக பயன்படுத்திக்கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் கோச்சுசேப் சிட்டிலப்பிள்ளி. வி-கார்டு நிறுவனத்தின் தலைவர். அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் வோல்டேஜ் சிக்கல் – தொழில் வாய்ப்பாக மாற்றிய இளைஞர் – வி- கார்டு நிறுவனம் ஜெயித்த கதை!
கோச்சுசேப் சிட்டிலபள்ளி
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Aug 2025 15:56 PM

இந்தியாவில் ஸ்டெபிலைசர் பிராண்ட் என்றால் சட்டென நம் நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று வி-கார்டு (V-Gaurd). கிராமப்புறங்கள் நிறைந்த இந்தியாவில் அதிக அளவில் வோல்டேஜ் பிரச்னை இருந்து வந்தது. இதனால் தொலைக்காட்சி, ஃபிரிட்ஜ், ஏசி (AC)போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் அதற்கு தீர்வாக அமைந்தது தான் வி-கார்டு ஸ்டெபிலைசர். இதன் நிறுவனர் கோச்சுசேப் சிட்டிலப்பிள்ளி (Kochouseph Chittilappilly). கடந்த 1976 ஆம் ஆண்டு தனது தந்தையிடம் இருந்து பெற்ற 1 லட்ச ரூபாய் உதவியுடன் வி-கார்டு நிறுவனத்தை துவங்கினார். அந்த காலகட்டத்தில் வோல்டேஜ் பிரச்னையால் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்து வந்தன. இதனை பார்த்த அவருக்கு, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அப்படி உருவானது தான் வி-கார்டு. இந்த நிறுவனத்தின் வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் வி-கார்டு சந்தித்த சிக்கல்

வி-கார்டு நிறுவனம் துவங்கிய காலக்கட்டத்தில் முதன்முறையாக 15 ஸ்டெபிலைசரை மட்டும் தயாரித்தார். ஸ்டெபிலைசர் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வர, அவரது நிறுவனமும் வளரத் துவங்கியது. இந்த நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் அவருக்கு பெரிய சவாலாக இருந்தது. இதனால் அவர் தனது தொழிற்சாலையை மூடி, சிறு சிறு உற்பத்தியாளர்களுக்கு அவுட் சோர்ஸ் முறையில் ஸ்டெபிலைசரை உற்பத்தி செய்தார்.

இதையும் படிக்க : ரூ.15,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட கவின்கேர் நிறுவனம் – பன்னாட்டு நிறுவனங்களை வென்ற தமிழர்!

இந்த முறை அவருக்கு பெரிதும் கைகொடுத்தது. தற்போது 80க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில்நிறுவனங்கள் அவருக்காக ஸ்டெபிலைசரை உற்பத்தி செய்கின்றன. கடந்த 1984 ஆம் ஆண்டு கல்ஃப் நாட்டில் ஏராளமான கேரள மாநில தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். அந்த நேரத்தில் கேரளாவில் டிவிக்கள் பிரபலமானது. இதனால் கேரளா வி-கார்டின் மிகப்பெரிய பொருளாதார சந்தையாக மாறியது. இதனையடுத்து கேபிள்கள், சோலார் ஹீட்டர் போன்ற புதிய தயாரிப்புகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு கொச்சியில் வீக்லேண்ட் எனும் பொழுதுபோக்கு பூங்காவைத் திறந்தார். அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் வொண்டர்லா தொடங்கப்பட்டது. அது இன்றும் இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவாக இருக்கிறது. இன்று அவரது நிறுவனத்தின் மதிப்பு ரூ.726 கோடி என மதிப்பிடப்படுகிறது.

இதையும் படிக்க : 4 தலைமுறையாக தொடரும் வெற்றி… போத்தீஸ் உருவானது எப்படி தெரியுமா?

மனிதநேயம் மிக்க மனிதர்

கடந்த 2011 ஆம் ஆண்டு தனது 61 வயதில் கோச்சுசேப் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். அதனை பெற்றவர் ஒரு லாரி டிரைவர். இதற்கு அவர் குடும்பத்தார் மற்றும் மருத்துவர்களின் எதிர்ப்பையும் மீறி தன் முடிவில் உறுதியாக இருந்தார். இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.உருவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தால் ஏன் செய்யக் கூடாது என கேள்வி எழுப்பினார். இதனால் தாமாக முன்வந்து சிறுநீரகம் தானம் செய்ய முன் வருவார்கள் என அவர் நம்பினார்.