4 தலைமுறையாக தொடரும் வெற்றி… போத்தீஸ் உருவானது எப்படி தெரியுமா?
Pothys Success Story : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட போத்தீஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 4 தலைமுறைகளைக் கடந்தும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தற்போது நகைக் கடையும் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் துணிக் கடைகள் என்றால் மக்கள் மனதில் சட்டன நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று போத்தீஸ் (Pothys). போத்தீஸ் நிறுவனத்தின் வெற்றி, திடீரென வந்ததல்ல. அதற்கு பின்னால் 4 தலைமுறையினரின் உழைப்பு இருக்கிறது. இன்று துணிக்கடைகளையும் தாண்டி நகைக் கடையாகவும் அவர்கள் வியாபாரம் உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. கிட்டத்தட்ட 1935 ஆம் ஆண்டு விருதுநகர் (Virudhunagar) மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் எளிமையாக துவங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு, இன்று தமிழ் நாட்டில் கிளைகள் இல்லாத நகரங்களே இல்லை எனலாம். மேலும் உலக நாடுகளிலும் இதன் கிளைகள் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த நிறுவனத்தின் வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
போத்தீஸ் நிறுவனத்தின் துவக்கம்
கடந்த 1920களில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கே.வி.போத்தி மூப்பனார் என்பவர் ஊரில் கைத்தறி மூலம் நெய்யப்பட்ட துணிகளை ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தார். இதன் மூலம் கிடைத்த வருமானத்தில் விருதுநகர் மாவ்ட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 1935 ஆம் ஆண்டு ஒரு சிறிய துணிக்கடையை துவங்கினார். இது தான் எல்லாவற்றுக்கும் ஆரம்ப புள்ளி.
இதையும் படிக்க : சரியான திட்டமிடல்… வித்தியாசமான வியாபர யுக்தி – ரூ.2000 கோடி நிறுவனமாக வளர்ந்த ஆச்சி




அவரது கடையின் புகழ் விரைவாக வளர்ந்தது. அவர் ஊர் ஊராக சென்று துணி விற்றபோது, வாங்கிய வாடிக்கையாளர்கள், அவரது கடையத் தேடி வந்து துணிகள் வாங்கினர். இது அவரது பொருட்களின் தரத்தை காட்டியது. இதனால் வேறு ஊர்களில் இருந்தும் விசேஷங்களுக்கு இவரிடம் துணிகள் வாங்கினர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய துணிக்கடைகளில் ஒன்றாக வளர்ந்தது.
ஆடைகள் வடிவமைப்பில் புதுமை
அவருக்கு பின்னால் அவரது மகன் சடையாண்டி போத்தி குடும்ப வியாபாரத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றார். போத்தீஸ் என்ற பெயரில் கடந்த 1986 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இரண்டாவது கிளையைத் துவங்கினார். இது தான் போத்தீஸ் என்ற பிராண்டாக உயரக் காரணமாக அமைந்தது. போத்தீஸில் கிடைக்கும் தரமும், டிசைன்களும் மக்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக பண்டிகைகளுக்கு ஏற்ப அவர்கள் துணிகளை வடிவமைத்து விற்பனை செய்தனர். இதனால் வாடிக்கையாளர்கள் மனதில் போத்தீஸ் நிறுவனத்துக்கு தனி இடம் கிடைத்தது.
இதையும் படிக்க : 17 முறை தோல்வி – தற்போது ரூ.40,000 கோடி நிறுவனத்தின் தலைவர் – ஷேர்சாட் நிறுவனரின் வெற்றிக்கதை!
விரைவிலேயே மதுரை, சென்னை, கோயம்புத்தூர் என 18க்கும் மேற்பட்ட கிளைகள் செயல்படுகின்ரன. கொரோனா காலத்தில் கூட வாட்ஸ்அப் மூலம் துணிகளை விற்பனை செய்யும் புதிய யுக்தியை போத்தீஸ் நிறுவனம் கொண்டு வந்தது.
போத்தீஸ் நிறுவனம் துவங்கி 90 வருடங்களுக்கு மேலாகிறது. தற்போது 4வது தலைமுறையினர் நிறுவனத்தை கவனித்து கொள்கிறார்கள். எவ்வளவோ புதுமைகள் வந்தாலும் 4 தலைமுறைகளாக மாறாமல் இருப்பது அவர்கள் பொருட்களின் தரம். தற்போது துணிக்கடையைும் தாண்டி, நகைகள் விற்பனை செய்யும் கடைகளையும் போத்தீஸ் நிறுவனம் துவங்ககியிருக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.7000 கோடி என்று கூறப்படுகிறது.