Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மக்களின் பிரச்னையை பார்த்தவருக்கு கிடைத்த ஐடியா – ரூ.15 கோடி ஆண்டு வருமானம்… சிவம் தியாகி வென்றது எப்படி?

Supervisor to Multi-Crore Businessman: எந்த ஒரு வேலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் சிவம் தியாகி. ஒரு மருந்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருந்த அவர் தனது முழுமையான ஈடுபட்டால், ஹெல்த் கேர் நிறுவனம் துவங்கி, தொழிலில் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறார். அவரது வெற்றிக்கதையை பார்க்கலாம்.

மக்களின் பிரச்னையை பார்த்தவருக்கு கிடைத்த ஐடியா – ரூ.15 கோடி ஆண்டு வருமானம்… சிவம் தியாகி வென்றது எப்படி?
Shivam Tiyagi, Fytika Healthcare
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Aug 2025 15:25 PM

டெல்லியைச் (Delhi) சேர்ந்த சிவம் தியாகி ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் தனது கடின உழைப்பால் இன்று ரூ. 15 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனத்தின் தலைவர்.  தான் எந்த வேலை செய்தாலும் கடமைக்கு செய்வதில்லை, முழுமையாக அறிந்துகொண்டு, தன்னுடைய பெஸ்டை கொடுப்பேன் என்கிறார். அந்த திறன் தான் அவரை சாதாரணமாக மருந்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருந்த அவரை, வெற்றிகரமாக இயங்கும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு காசியாபாத்தில் உள்ள மருத்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருந்திருக்கிறார். அங்கு தொடர்ந்து 7 ஆண்டுகளாக பணியாற்றிய அவர், அந்த தொழிலின் அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது திறமை மேல் நம்பிக்கை வைத்து ஃபிட்டிகா ஹெல்த் கேர் (Fytika Healthcare)  என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவரது கடின உழைப்பால் இன்று அவரது நிறுவனம் சராசரியாக ஆண்டுக்கு ரூ.15 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

அவரது நிறுவனத்தின் சார்பில் அழகு மற்றும் உணவு சப்ளிமென்ட்களை தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் ஆகியவை மக்களிடையே நன்மதிப்பை பெற்று, அதிகம் விற்பனையாகி வருகிறது. ஒரு ஐடியாவைத் தேர்ந்தெடுத்து அதன் மீது கடின உழைப்பை போட்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதையும் படிக்க : 12 வயதில் திருமணம்… தற்கொலை முயற்சி – துன்பங்களைக் கடந்து தொழிலில் சாதித்த கல்பனா சரோஜ்!

ஃபைட்டிகா நிறுவனத்தை துவங்கிய சிவம் தியாகி

கடந்த ஜூலை 1, 2020 அன்று ஃபைட்டிகா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தை துவங்கினார். அது உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நேரம். மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். அப்போது சந்தையில் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் முழுமையாக பலனளிக்கவில்லை. இதனை அவர் ஒரு வாய்ப்பாக பார்த்தார். ஆயுர்வேத மருந்துகள் மற்றும் நவீன அறிவியல் ஆகியவற்றை இணைத்து ஆயூர்சூட்டிகல்ஸ் என்ற மருந்தை உருவாக்கினார். அவர் நிறுவன்த்தின் பெயர் ஃபைட்டிகா என்பது கிரேக்க வார்த்தையில் இருந்து வந்திருக்கிறது. அதன் பொருள் இயற்கையான மூலிகள்.

குறுகிய காலத்திலேயே அசூர வளர்ச்சி

அவரது நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டு மட்டும் ரூ.15 கோடி லாபம் பெற்றது. இதற்கு காரணம் அவர் பொருட்களின் தரம், தயாரிக்கும் முறை, தனித்துவமான பேக்கேஜிங். கூடுதலாக பிராண்டிங். தான் தயாரித்த பொருளை தனது விளம்பர யுக்தி மூலம் மக்களிடைம் கொண்டு சேர்ந்திருக்கிறார். அவர் தயாரிப்பு FSSAI இன் விதிகளைப் பன்றி தயாரிக்கப்பட்டது என சான்றளிக்கப்பட்டது. ஆன்லைனில் அவரது தயாரிப்புகளை விற்க தனித்துவமான விளம்பர யுக்தியைப் பயன்படுத்தினார்.

இதையும் படிக்க :  மாதம் ரூ.6,500 சம்பளம்… இன்று ரூ.150 கோடி நிறுவனத்தின் உரிமையாளர் – ரிஸ்க் எடுத்தவருக்கு கிடைத்த வெற்றி!

ஆரம்பத்தில் அவரது தயாரிப்புகளுக்கு சந்தையில் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இருந்த போதிலும் அவரது கடின உழைப்பால்  நிறுவனம் தொடர்ந்து வளர்ந்தது. இன்று அவரது நிறுவனம் 23க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் சந்தைகளில் விற்பனையாகி வருகின்றன.  அவரது நிறுவனம் குறுகிய காலத்திலேயே அசூர வளர்ச்சியடைந்திருக்கிறது. சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு சிவம் தியாகியின் இந்தப் பயணம் ஒரு உத்வேகமளிக்க கூடியதாக இருக்கிறது.