Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

12 வயதில் திருமணம்… தற்கொலை முயற்சி – துன்பங்களைக் கடந்து தொழிலில் சாதித்த கல்பனா சரோஜ்!

From Pain to Power : வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் பலரும் வறுமையான குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால் வென்றவர்கள் தான். அப்படி ஒருவர் தான் கல்பனா சரோஜ் , மகாராஷ்டிராவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், குழந்தை திருமணம், குடும்ப வன்முறை என பார்க்காத துன்பங்களே இல்லை எனலாம். ஆனால் அவர் இன்று ரூ.11 கோடி நிறுவனத்தின் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

12 வயதில் திருமணம்… தற்கொலை முயற்சி – துன்பங்களைக் கடந்து தொழிலில் சாதித்த கல்பனா சரோஜ்!
கல்பனா சரோஜ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Aug 2025 17:32 PM

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் துன்பங்களையை சந்திக்காதவர்கள் இல்லை, எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதனை விடாமுயற்சியால் எதிர்கொண்டவர்கள். அந்த வகையில் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், குழந்தை திருமணம் (Child Marriage), குடும்ப வன்முறை, தற்கொலை முயற்சி என அனைத்து தடைகளையும் உடைத்து,  இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார். அவர் தான் கல்பனா சரோஜ் (Kalpana Saroj). தற்போது ரூ.11.2 கோடி ஆண்டு வருமானம் கொண்ட கமனி டியூப்ஸ் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றும் இவர் தனது வாழ்க்கையில் சந்திக்காத துன்பங்களே இல்லை எனலாம். துன்பம் ஒன்றைய வாழ்க்கையில் அதிகம் பார்த்தவர், இன்று இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது வென்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை

கடந்த 1961 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் அகோலா பகுதியில் பிறந்த கல்பனா, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேய பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். அவரது பள்ளியில் பல அவமரியாதைகளை சந்த்திருக்கிறார்.   இந்த நிலையில் , கல்பனாவுக்கு 12 வயது ஆனபோது, அவரது குடும்பத்தினர் அவரை விட 10 வயது மூத்த நபரை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.  திருமணத்துக்கு பிறகு அவரது கணவரால் மும்பைக்கு அழைத்து செயல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவர் சாலையோரம் வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். நிறைய கனவுகளுடன் இருந்த கல்பனா, தனது வாழ்க்கையை நினைத்து தனது 16 வயதில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அப்போது கல்பனாவின் தந்தை, அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.

இதையும் படிக்க : அருண் ஐஸ்கிரீம் டூ ஆரோக்கியா பால்…. கல்லூரி தேர்வில் தோற்றவர், வாழ்க்கையில் வென்ற கதை!

பின்னர் மீண்டும் மும்பைக்கு வந்த அவர் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். பின்னர் ரூ.50,000 கடன் வாங்கி சிறிய டெய்லரிங் கடை நடத்தி வந்திருக்கிறார். அவரது திறமையாலும் கடின உழைப்பாலும் நிறைய பணம் சம்பாதித்தார்.

படத்தயாரிப்பில் இறங்கிய கல்பனா

அந்த சமயத்தில் தந்தையின் கவனத்தால் காப்பாற்றப்பட்ட கற்பனா, உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். மீண்டும் மும்பைக்கு சென்று ஒரு துணிகரமான முடிவெடுத்தார். ஒரு துணிக்கடை தொழிலில் வேலை பார்த்து வாழ்க்கையை மீட்டெடுத்தார். பின்னர் அரசு கடனாக ரூ.50,000 வாங்கி தையல் மற்றும் மரப்பணிக்கடை தொடங்கினார். அவரது துல்லியமான பாசறைத் திறன் மற்றும் கடுமையான உழைப்பால் அவர் வெற்றிக் கொடி நாட்டத் தொடங்கினார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா மாவட்டத்தில் உள்ள கைர்லாஞ்சி கிராமத்தில், ஒரு தலித் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கைர்லாஞ்சி என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்… உலகின் முன்னனி சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் – யார் இந்த ஜெய் சௌத்ரி?

தொழில்துறையில் சாதனை

அதன் பின் ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி, அதிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தார். இந்த நிலையில் கடனில் தத்தளித்த கமனி டியூப்ஸ் என்ற நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டு,  அதன் இயக்குநர் குழுவில் சேர்ந்தார். குறுகிய காலத்திலேயே அதன் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர், தனது கடின முயற்சியால் அதனை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றினார்.

பத்மஸ்ரீ விருது

விரைவிலேயே கல்பனாவின் வளர்ச்சி நாடு முழுவதும் பெரிதும் கவனிக்கப்பட்டன. அவரது சமூக பங்களிப்பை பாராட்டி கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் ஆதரவால் பெண்களுக்கு முன்னேறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் அவர், வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்வடையாமல் முன்னேற வேண்டும் என பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார். வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் கல்பனா சரோஜின் வாழ்க்க மிகப்பெரும் உதாரணம்.