ஓவர் நைட்டில் கிடைத்த உலகப் புகழ்: தேசிய பிராண்டாக மாறிய சாலை ஓர டீக்கடை – டாலி சாய்வாலா வென்ற கதை
Tea Seller Turned Icon : கடந்த 2024 ஆம் ஆண்டு நாக்பூரில் சாலையோர டீக்கடையில் பில்கேட்ஸ் டீ குடிக்க, அந்த கடை ஓவர் நைட்டில் உலகப் புகழ்பெற்றது. அந்த கடைக்காரர் டாலி சாய்வாலா என சமூக வலைதளங்களில் டிரெண்டானார். இந்த நிலையில் அவர் இந்தியாவின் முன்னணி ஃபிரான்சைஸின் தலைவராக இருக்கிறார். அவரது வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்ககலாம்.

நாக்பூரைச் சேர்ந்த டீ வியாபாரி சுனில் படில் (Sunil Patil) இன்று தேசிய அளவில் டாலி சாய்வாலா என்ற பெயரில் டிரெண்டாகியிருக்கிறார். அவரது ஒரே ஒரு வீடியோவால் உலகமே திரும்பிப் பார்த்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு பில்கேட்ஸ் ஒரு டீ குடிக்கும் வீடியோ வைரலான பிறகு, டாலி சாய்வாலா என்ற சாதாரண டீ வியாபாரி, இன்று இந்தியாவின் முன்னனின் டீ ஃபிரான்சைஸின் தலைவராக இருக்கிறார். கடந்த ஜூலை 11, 2025 அன்று டாலி சாய்வாலா தனது “Dolly Ki Tapri” என்ற பெயரில் ஒரு பான் இந்தியா ஃபிரான்சைஸ் திட்டம் அறிவித்தார். அதற்கு வெறும் 48 மணி நேரத்தில் 1,609 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. இது அவரது பிரபலத்தை மட்டுமல்ல, மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது.
டாலி சாய்வாலா அறிமுகப்படுத்தியிருக்கும் பிரான்சைஸின் சிறப்பம்சங்கள்
வித்தியாசமாக டம்ளரில் டீ ஊற்றும் ஸ்டைல், அவரது தனித்துவமான உடைகள், மண் குவளையில் டீ விற்கும் முறை என இவையெல்லாம் சேர்ந்து அவரது கடையை ஒரு பிராண்டாக மாற்றியிருக்கிறது. இந்த ஃபிராஞ்சைஸ் மூன்று ஆப்சன்கள் வழங்கப்படுகிறது.
- அதில், கார்ட் மாடல், அதாவது தள்ளு வண்டி மாடலை பெற ரூ.4.5 – 6 லட்சம் வரை நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
-
ஸ்டோர் மாடல் என்பது சிறிய கடை செட்டப் பெற ரூ.20 – 22 லட்சம் வரை நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதையும் படியுங்கள்அருண் ஐஸ்கிரீம் டூ ஆரோக்கியா பால்…. கல்லூரி தேர்வில் தோற்றவர், வாழ்க்கையில் வென்ற கதை!கூலித்தொழிலாளியின் மகன்.. இன்று எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் – சாதித்தது எப்படி?பைக் துடைத்தவரை பார்த்தவருக்கு கிடைத்த ஐடியா- ரூ.1.3 கோடி ஆண்டு வருமானம் – பைக் பிளேஸர் நிறுவனர் கேசவ் ராய் வெற்றி பயணம்மாற்றி யோசித்த நபர்… வெளிநாட்டு பிராண்டுகளை பின்னுக்கு தள்ளிய ட்ரூல்ஸ் நிறுவனம் – யார் இந்த ஃபஹிம்? -
பிரீமியம் கஃபே, பெரிய காபி ஷாப் போன்ற மாடலைப் பெற ரூ.39 – 43 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இந்த மாடல்களில் நீங்கள் ஒன்றை தேர்ந்தெடுத்தால், ஒவ்வொரு வாரத்திற்கு குறைந்தது உங்கள் கடையை பற்றி 3 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்போட வேண்டும், அதற்காக டிஜிட்டல் டெம்ப்ளேட்கள், பிரீமிக்ஸ் சப்ளை செயின், வாராந்த ஆய்வுகள் ஆகிய சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் படிக்க : விவசாயிகளை கோடீஸ்வரராக்கிய அமுல்… பால் புரட்சிக்கு வித்திட்ட ஹீரோ – யார் இந்த வர்கீஸ் குரியன்?
எளிமைக்கு கிடைத்த வெற்றி
இன்றைய வாடிக்கையாளர்கள் அழகான, பிரம்மாண்டமான விஷயங்களில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், மிக எளிமையான விஷயங்களையும் நேசிக்கிறார்கள். டாலி சாய்வாலாவின் வித்தியாசமான அணுகுமுறை, எளிமை போன்றவை மக்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. அது அவரது வெற்றிக்கான காரணமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்தை அவர் அடைந்திருக்கிறார். டாலிக்கு தற்போது 50 லட்சம் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் மற்றும் 20 லட்சம் யூடியூப் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இன்று அவரது நிறுவனத்தின் பெயரில் அதிகாரப்பூர்வமாக பல நகரங்களில் ஃபிரான்சைஸ் திறக்கப்படுகிறது.
இதையும் படிக்க : இட்லி, தோசை மாவு விற்று ரூ. 600 கோடி நிறுவனமாக வளர்ந்த ஐடி ஃபிரெஷ் – வளர்ச்சிக்கான காரணம் தெரியுமா?
திடீரென வந்த புகழ் நீடிக்குமா?
தனி நபராக இந்த பிரான்சைஸை அவர் தொடங்கியிருப்பதால் இது நீண்ட காலத்துக்கு நீடிக்குமா, வழக்கமான சோசியல் மீடியா டிரெண்ட் போல கடந்து விடுமா என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது. இது ஒரு ஆளுமை சார்ந்த பிராண்ட். இது நிலைத்து நிற்க வேண்டுமானால், டாலியைப் போன்ற செயல்பாடுகளையும், தரத்தையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என நிபணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டாலி சாய்வாலா ஒரு சாதாரண டீ வியாபாரியாக இருந்து, இன்று இந்தியாவின் மிக முக்கிய நபராக மாறியிருக்கிறார். இதற்காக அவர் பெரிய மெனக்கெடல்கள் எதுவும் செய்யவில்லை. தன்னிடம் உள்ள திறமைகளை மட்டுமே மூலதனமாக மாற்றியிருக்கிறார். அவரது எளிமை அவருக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.