Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மெரினாவில் டீ , சமோசா விற்றவர்… இன்று 14 ஹோட்டல்களின் உரிமையாளர் – யார் இந்த பாட்ரிசியா நாராயண்?

From Marina Beach to Awards : சிலரின் வெற்றிக்கதையைக் கேட்கும்போது நம்ப முடியாத ஆச்சரியங்கள் நிறைந்த சினிமா கதை போல இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர் தான் பாட்ரிசியா நாராயண். இளம் வயதில் திருமணம், குடும்ப வறுமை என அனைத்து சவால்களையும் சமாளித்து இன்று சென்னையில் 14 ஹோட்டல்களை நடத்தும் சாதனைக்கு சொந்தக்காரர்.

மெரினாவில் டீ , சமோசா விற்றவர்… இன்று 14 ஹோட்டல்களின் உரிமையாளர் – யார் இந்த பாட்ரிசியா நாராயண்?
பாட்ரிசியா நாராயண்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 08 Aug 2025 15:29 PM

வெற்றி என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. அதன் பின்னால் தியாகம், விடாமுயற்சி, கடின உழைப்ப, கண்ணீர் என பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சவால்களை எதிர்கொள்ள முடியாமல் ஒரு சிலர் பாதியிலேயே விலகி விடுகின்றனர். ஆனால் ஒரு சிலரே தைரியமாக எதிர்கொண்டு வாழ்க்கையில் உயரத்தை அடைகின்றனர். சிலரின் கதையை கேட்கும்போது சினிமா கதை போல தோன்றும். அப்படிப்பட்ட சுவாரசியங்கள் நிறைந்தது தான் பாட்ரிசியா நாராயணனின் வாழ்க்கை. புகழ்பெற்ற சென்ன மெரினா கடற்கரையில் (Merina Beach) தள்ளுவண்டியில் டீ,  (Tea) சமோசா விற்று வாழ்க்கை நடத்தியவர் இன்று 14 ஹோட்டல்களின் உரிமையாளர். அவரது வாழ்க்கை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் கடைக்கோடியான நாகர்கோவிலில் பிறந்த பாட்ரிசியா குடும்ப வறுமையின் காரணமாக தனது 17 வயதில் விருப்பமில்லாத திருமணம் செய்துகொண்டார். மதுவுக்கு அடிமையான அவர் கணவரால் தினம் தினம் துன்பத்தை அனுபவத்திருக்கிறார். தினசரி செலவுகளுக்கு அல்லாடும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் இருந்திருக்கிறது.

இதையும் படிக்க : மாதத் தவணை திட்டம் – நிறைவேறிய எளிய குடும்பங்களின் கனவுகள் – வசந்தகுமாரின் வெற்றிக்கதை

மெரினாவில் துவங்கிய வாழ்க்கை

குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 1980 ஆம் ஆண்டு குடும்பத்தை நடத்தும் நோக்கில் சென்னை மெரினா கடற்கரையில் சிறிய தள்ளுவண்டியில் டீ, காபி, சமோசா விற்கத்த தொடங்கினார். ஆரம்பத்தில் தினமும் 50 பைசா மட்டுமே வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால் பாட்ரிசியாவின் தளராத மனப்பாங்கும், கடின உழைப்பின் காரணமாக வியாபாரம் மெல்ல வளரத் தொடங்கியது.

அவரது உழைப்பின் காரணமாக மிகப்பெரிய உயரத்தை அடைந்தார். இந்த நிலையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஹோட்டலின் இயக்குநராக உயர்ந்தார். அவரது கடின உழைப்பும்,  வியாபார நுணுக்கம் காரணமாக விரைவிலேயே அந்த நிலைக்கு அவரை உயர்த்தியது.

இதையும் படிக்க : 12 வயதில் திருமணம்… தற்கொலை முயற்சி – துன்பங்களைக் கடந்து தொழிலில் சாதித்த கல்பனா சரோஜ்!

துயரங்களுக்கும் மத்தியிலும் தொடரும் சாதனை

கடந்த 2002 ஆம் ஆண்டு பாட்ரிசியாவின் கணவர் உடல் நலக்குறைவால் காலமானார். அந்த துயரத்தில் இருந்து அவர் வெளியே வருவதற்குள் அவரது மகளும் மருமகனும் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் உயரிழந்தனர். இருந்தாலும் பாட்ரிசியா தளர்ந்து விடவில்லை. தனது மகளின் நினைவாக சந்தீபா என்ற ஹோட்டலைத் தொடங்கினார். விரைவிலேயே சென்னையின் மிக முக்கிய உணவகங்களில் ஒன்றாக மாறியது.  இன்று அவரது சொத்து மதிப்பு ரூ.100 கோடி என மதிப்பிடப்படுகிறது.

விருதுகள் மற்றும் பாராட்டுகள்

கடந்த 2010 ஆம் ஆண்டு எஃப்ஐசிசிஐ சிறந்த பெண் தொழிலதிபர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.  இன்றும் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தைரியமும் கடின உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.  வாழ்க்கையில் எவ்வளவு சவால்கள் வந்தாலும், மனம் தளராமல் தொடர்ந்து போராடினால் வெற்றியை நிச்சயம் அடையலாம் என்பது தான் பாட்ரிசியா நாராயணின் வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்.