2028-க்குள் வெள்ளி விலை ரூ.2 லட்சத்தை எட்டும்.. அடித்து சொல்லும் பொருளாதார வல்லுநர்கள்!
Rapid Rise of Silver Price | தங்கத்தை போலவே வெள்ளியும் மிக வேகமாக விலை உயர்ந்து வருகிறது. அதாவது கடந்த சில மாதங்களில் மட்டும் வெள்ளி வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்தை எட்டும் நிலை உள்ளது.

தங்கம் விலை (Gold Price) மிக வேகமாக உயர்ந்து வரும் நிலையில், சத்தமே இல்லாமல் வெள்ளி விலையும் (Silver Price) சரசரவென உயர்ந்து வருகிறது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.2 லட்சத்தை எட்டும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனை செய்யப்படும் நிலையில், இனி வரும் நாட்களில் வெள்ளியும் சாமானிய மக்களுக்கு எட்டா கணியாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், வெள்ளி விலை உயர்வை குறித்து பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சரசரவென உயரும் வெள்ளி விலை
சாமானிய மக்கள் எளிதாக வாங்க கூடிய ஒரு உலோகமாக தான் வெள்ளி இருந்தது. வெள்ளி மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சாமானியர்கள் வெள்ளி பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது இந்த நிலமை இல்லை. காரணம், தங்கம் எப்படி விலை ஏறிக்கொண்டே செல்கிறதோ அதே அளவுக்கு வெள்ளியும் மிக வேகமாக விலை ஏறுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்த பலன்களை தரும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க : வந்தாச்சு 9 காரட் தங்கம்.. ஒரு சவரன் வெறும் 40,000 தான்.. இனி எல்லாருமே தங்கம் வாங்கலாம்!




8 மாதங்களில் ரூ.38,000 வரை உயர்ந்த வெள்ளி விலை
- ஜனவரி 1, 2025 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- பிப்ரவரி 1, 2025 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மார்ச் 1, 2025 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.105-க்கும், ஒரு கிலோ ரூ.1,05,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- ஏப்ரல் 1, 2025 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மே 1, 2025 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- ஜூன் 1, 2025 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- ஜூலை 1, 2025 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- ஆகஸ்ட் 1, 2025 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.123-க்கும், ஒரு கிலோ ரூ.1,23,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 1, 2025 ஒரு கிராம் வெள்ளி ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1,36,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (செப்டம்பர் 01, 2025) ஒரு கிராம் வெள்ளி ரூ.136-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 02, 2025) மீண்டும் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிராம் வெள்ளி ரூ.137-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 8 மாதங்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.38 மற்றும் கிலோவுக்கு ரூ.38,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை ரூ.2 லட்சத்தை எட்டும் – பொருளாதார வல்லுநர்கள்
வெள்ளி விலை இத்தகைய உயர்வை சந்தித்து வருவதற்கு முக்கிய காரணம், உலக அளவில் வெள்ளியில் அதிக முதலீடு செய்யப்படுவது தான். இதே நிலை நீடித்தால் 2028 ஆம் ஆண்டுக்குள் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2 லட்சன் வரை உயரும் வாய்ப்பு உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.