Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gold Price : ஷாக் அடிக்கும் தங்கம் விலை.. ஒரு கிராம் ரூ.10,000-த்தை நெருங்கியது!

Gold Price Nearing 10,000 Rupees | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 1, 2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் கிராம் விலை ரூ.10,000-த்தை நெருங்கியுள்ளது.

Gold Price : ஷாக் அடிக்கும் தங்கம் விலை.. ஒரு கிராம் ரூ.10,000-த்தை நெருங்கியது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Sep 2025 12:06 PM

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை (Gold Price) கடுமையான விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 01, 2025) மாதத்தின் முதல் நாள் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது இன்றைய தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை ரூ.10,000 நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்கள் இவ்வாறு தங்கம் விலை உயரும் பட்சத்தில் விரைவில் ஒரு கிராம் ரூ.10,000-த்தை எட்டிவிடும் நிலை உருவாகியுள்ளது. தங்கம் மட்டுமன்றி, வெள்ளி விலை அதே அளவுக்கு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 01, 2025) வெள்ளி, கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னை இன்று (செப்டம்பர் 01, 2025) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705-க்கும் ஒரு சவரன் ரூ.77,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (ஆகஸ்ட் 31, 2025) ஒரு கிராம் தங்கம் ரூ.9,620-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரு சவரன் ரூ.76,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (செப்டம்பர் 01, 2025) வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (ஆகஸ்ட் 31, 2025) வெள்ளி கிராம் ரூ.134-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : தனிநபர் கடன் Vs தங்க நகை கடன்?.. இந்தியாவில் நிதி தேவைக்கு எது சிறந்தது?

சாமானியர்களுக்கு எட்டா கணியாக மாறிவரும் தங்கம்

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே கடும் விலை உயர்வை கண்டு வருகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருவதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.10,0000 வரை செல்ல வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில், தங்கம் விலை ரூ.10,000-த்தை நெருங்கிவிட்டது. அதாவது ஒருகிராம் தங்கம் விலை ரூ.10,000-த்தை எட்ட இன்னும் ரூ.300 மட்டுமே குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால் சாமானியர்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழல் உருவாகிடும் அச்சம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : திருமணத்தில் வழங்கப்படும் மொய் பணத்துக்கு வரி செலுத்தணுமா? உண்மை என்ன?

மூன்று மாதத்தில் பலமடங்கு உயர்ந்த தங்கம் விலை

  • ஜூன் 1, 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • ஜூலை 1, 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,020-க்கும், ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • ஆகஸ்ட் 1, 2025 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,150-க்கும், ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2,00 உயர்ந்துள்ளது. இதேபோல சவரனுக்கு ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது.