GST 2.0: ஜிஎஸ்டி 2.0.. பால், பட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா?
GST Cut Expected | தீபாவளி பண்டிகையை முன்னிட்டி ஜிஎஸ்டி வரி விதிப்பில் முக்கிய மாற்றம் வரும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வரியை 12%-ல் இருந்து 5% ஆக குறைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வரும் என இந்திய பிரதமர் மோடி (Indian Prime Minister Narendra Modi) அறிவித்துள்ள நிலையில், அது குறித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறையும் என்றும் இதன் காரணமாக சாமானிய மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் வரும் முக்கிய மாற்றம்
ஆகஸ்ட் 15, 2025 அன்று நாட்டின் 79வது சுதந்திர தின விழாவில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார். அதனை தொடர்ந்து நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர், ஜிஎஸ்டி வரி விதிப்பில் முக்கிய மாற்றம் வர உள்ளதாகவும், அது சாமானிய மக்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் இருக்கும் என்று தெரிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் மற்றும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க : கேபிள் டிவி கட்டணம் குறையுமா? ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை




பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டியை குறைக்குமா அரசு?
பால், பட்டர், காலான், பேரிச்சம்பழம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று ஃபிட்மன்ட் கமிட்டி (Fitment Committee) ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு முன்மொழிந்துள்ளது. இந்த வேண்டுகோளுக்கு இணங்க அத்தியாவசிய உணவு பொருட்களின் ஜிஎஸ்டியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் திண்பண்டங்கள் தயாரித்து, விற்பனை செய்யும் கடைகளுக்கும் விளக்கு கிடைக்கும்.
இதையும் படிங்க : ஜிஎஸ்டி வரியில் வரும் மாற்றம் – எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும்
ஜிஎஸ்டி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு விதமான எதிர்ப்பார்ப்புகளும், கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், இது முழுவதுமாக ஜிஎஸ்டி கவுன்சில் இடம் உள்ளது. அதாவது செப்டம்பர் 03, 2025 மற்றும் செப்டம்பர் 04, 2025 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டடால் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி 2.0 வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.