Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெள்ளத்தில் கார், பைக் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? இன்சூரன்ஸ் நிபுணர்கள் சொல்வது என்ன?

Monsoon Car Safety Tips: இந்தியாவில் மழைகாலம் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெரு நகரங்களில் மழை பெய்யும்போது கார், பைக் போன்ற வாகனங்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றன. இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என பார்க்கலாம்.

வெள்ளத்தில் கார், பைக் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? இன்சூரன்ஸ் நிபுணர்கள் சொல்வது என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Aug 2025 19:56 PM

இந்தியாவில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் (Chennai) கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் சென்னை கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனையடுத்து சாலைகளில் தேங்கும் மழை நீரால் கார், பைக் போன்ற வாகனங்கள் கடும் சேதங்களை சந்திக்கின்றன. சென்னையில் கனமழை காரணமாக தேங்கும் மழை நீரால் கார்களின் என்ஜினில் நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் என்ஜினையே மாற்றும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பலரும் மேம்பாலங்களில் கார்களை நிறுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் மழை காலங்களில் வாகனங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் பெய்யும் கனமழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கார்கள் போன்ற வாகனங்கள் பெரும் சேதத்தை சந்திக்கின்றன. இதனை தவிர்க்க, சரியான காப்பீடு, பராமரிப்பு மற்றும் டிரைவிங் ஆகியவை கார்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கும் என காப்பீட்டு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதையும் தவிர்க்க: இனி ரயிலில் அதிக லக்கேஜ் கொண்டு போக முடியாது.. வரும் புது ரூல்ஸ்!

கன மழை பெய்கிற சமயங்களில், அடித்தளத்தில் கார்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். அதே போல வாகனங்களுக்கான பாலிசியை புதுப்பிக்கும்போது என்ஜின் பாதுகாப்பு கவர், ரோட் சைட் அசிஸ்டன்ஸ் போன்ற கூடுதல் வசதிகளை சேர்க்கவும். இவை உங்கள் வாகனம் பாதிக்கும்போது பாதுகாப்பு அளிக்கும்.  மழை காலத்துக்கு முன்பே, கார் கதவுகளின் ரப்பர் சீல் சரியாக இருக்கிறதா? டயர் கண்டிஷன் சரியாக இருக்கிறதா என்பதை கவனிப்பது அவசியம். மேலும் டேங்க்கில் எரிபொருள் நிரப்பும்போது முழுமையாக நிரப்ப கூடாது. வெள்ளம் நிறைந்த சாலைகளில் காரை வேகமாக ஓட்டக் கூடாது. காருக்குள் நீர் புகும் சூழ்நிலை ஏற்பட்டால் காரை உடனே ஆஃப் செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், கதவு ரப்பர் சீல்கள் சரியாக உள்ளதா, டயர் கெண்டிஷன் சரியா என்று கவனிக்க வேண்டும். எரிபொருள் டேங்க் குறைந்தது பாதி நிரப்பி வைத்திருப்பதும் அவசியம். வெள்ளம் நிறைந்த சாலையில் வேகமாக ஓட்டுவது தவறு. எங்காவது நீர் நிறைந்தால் உடனே நிறுத்தி, engine-ஐ ஆஃப் செய்து, மாற்று வழியைத் தேர்வு செய்ய வேண்டும். வெள்ளத்தில் காரை ஓட்டுவதோ, மீண்டும் ஸ்டார்ட் செய்வதோ claim rejection-க்கு வழிவகுக்கும்.

வாகனம் வெள்ளத்தில் சிக்கிய பிறகு செய்ய வேண்டியது

  • கார் வெள்ளத்தில் சிக்கினால் உடனடியாக என்ஜினை ஆஃப் செய்ய வேண்டும்.
  • சம்பவ இடத்தை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • உடனடியாக இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தகவல் கொடுத்து அருகில் உள்ள சர்வீஸ் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்க : பெற்றோருக்கு வீட்டு வாடகை செலுத்தினால் HRA க்ளெய்ம் செய்யலாமா?.. விதிகள் கூறுவது என்ன?

செய்யக் கூடாதது

  • வெள்ளத்தில் கார் சிக்கினால் என்ஜினை ஆஃப் செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் ஸ்டார்ட் செய்யக் கூடாது.
  • நீங்களாக அருகில் உள்ள கடைகளில் கொடுத்து சர்வீஸ் செய்ய முயற்சிக்க கூடாது.
  • இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தகவல் கொடுக்க தாமதிக்க கூடாது.

கிளைம் மறுக்கப்படும் பொதுவான தவறுகள்

  • 48 மணி நேரத்திற்குள் இன்சூரனன்ஸ் கம்பெனிக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது
  • காப்பீட்டில் என்ஜின் பாதுகாப்பு வசதி சேர்க்காதது.
  • இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஆய்வு செய்வதற்கு முன் சர்வீஸ் செய்ய முயற்சிப்பது.
  • பாதிக்கப்பட்டபோது புகைப்படம் எடுக்காமல் இருப்பது
  • இவை அனைத்தும் உங்கள் காப்பீடு கோரிக்கை மறுக்கப்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.