Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெற்றோருக்கு வீட்டு வாடகை செலுத்தினால் HRA க்ளெய்ம் செய்யலாமா?.. விதிகள் கூறுவது என்ன?

HRA Claim for Parents Rent | இந்தியாவில் பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை சேர்த்து கவனித்து கொள்கின்றனர். அவ்வாறு பெற்றோருக்கு வீட்டு வாடகை செலுத்தும் பிள்ளைகள் அதற்கு HRA க்ளெய்ம் செய்வதன் மூலம் வருமான வரி விலக்கு பெற முடியும் என கூறப்படுகிறது.

பெற்றோருக்கு வீட்டு வாடகை செலுத்தினால் HRA க்ளெய்ம் செய்யலாமா?.. விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Aug 2025 14:50 PM IST

இந்திய குடும்பங்களை பொருத்தவரை வயதான பிறகு பெற்றோர்களை பிள்ளைகள் கவனித்துக்கொள்கின்றனர். வயதான பிறகு பெற்றோர்களால் நிதியை உருவாக்க முடியாத சூழல் ஏற்படும் நிலையில், அவர்களுக்குக்கான மொத்த செலவையும் பிள்ளைகள் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில், பெற்றோர்களுக்கு வீட்டு வாடை செலுத்தும் பட்சத்தில் HRA (House Rent Allowance) க்ளெய்ம் செய்வதன் மூலம் வரி சேமிப்பு செய்ய முடியும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அதற்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருமான வரித்துறை கூறுவது என்ன?

பெற்றோருக்கு வீட்டு வாடகை செலுத்துவதன் மூலம் வருமான வரித்துறை வரி சலுகை வழங்கும் நிலையில், அதற்கான வரம்பையும் வைத்துள்ளது. இந்த நிலையில் HRA க்ளெய்முக்கு விண்ணப்பிக்கும் ஊழியர்கள் அதற்கான முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. காரணம், வருமான வரித்துறை உண்மை தரவுகளை சோதனை செய்ய செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பயன்படுத்துகிறது. அதன் மூலம் போலி மற்றும் சந்தேகத்திற்கு இடமான க்ளெய்ம் கோரிக்கைகள் மிக எளிதாக கண்டறியப்படும்.

இதையும் படிங்க : மாறாத ரெப்போ விகிதம் – ஹோம் லோன் பெற்றவர்களுக்கு பாதிப்பா?

பெற்றோருக்கு வாடகை செலுத்துவதற்கான HRA க்ளெய்ம் செய்வதற்கான முக்கிய அம்சங்கள்

  • உங்கள் வங்கி கணக்கில் இருந்து மாதம் தோறும் முறையாக வீட்டி வாடகை செலுத்த வேண்டும்.
  • நீங்கள் வாடகை செலுத்தும் வீட்டிற்கான முறையான வாடகை பத்திரத்தை வைத்திருக்க வேண்டும்.
  • வருமான வரி தாக்கலின் போது உங்கள் பெற்றோர் வாடகை குறித்து குறிப்பிடுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தவறவிடும் பட்சத்தில் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அல்லது அபராதம் விதிக்கலாம்.

இதையும் படிங்க : ஒரு மாநில பதிவு எண் கொண்ட வாகனத்தை வேறு மாநிலத்தில் ஓட்ட முடியுமா? உண்மை என்ன?

HRA க்ளெய்ம் செய்யும்போது செய்யவே கூடாத தவறுகள்

  • வங்கி கணக்கில் இருந்து முறையாக வாடகை பணம் செலுத்தாமல் HRA க்ளெய்முக்கு விண்ணப்பிப்பது வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வழிவகை செய்துவிடும்.
  • ஆண்டு முழுவதும் வாடகை செலுத்தாமல் மொத்தமாக ஆண்டின் இறுதியில் வாடகை செலுத்துவது மிகப்பெரிய சிக்கலை ஏற்பட்டுத்தும்.
  • உங்கள் பெற்றோர் வீட்டு வாடகை செலுத்துவது குறித்து வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாமல் இருக்கும் பட்சத்தில், அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

எனவே மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்கள் குறித்து மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.