Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேபிள் டிவி கட்டணம் குறையுமா? ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை

GST Update : கேபிள் டிவி சேவைக்கான ஜிஎஸ்டியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்துக்கு கேபிள் டிவி சங்கங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன. இதனால் கேபிள் டிவி கட்டணம் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

கேபிள் டிவி கட்டணம் குறையுமா?  ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Aug 2025 15:42 PM

நீண்ட காலமாக கேபிள் டிவி எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறது. குறிப்பாக பலரின் பொழுதுபோக்கு அம்சமாக கேபிள் டிவி விளங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளில் திரைப்படங்கள், செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்து வருகிறார்கள். ஆனால் கேபிள் டிவி சேவைக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி (GST) வரி விதிக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு கேபிள் டிவி கட்டணம் அதிகமாக உள்ளதால், மக்களின் மாத பட்ஜெட்டில் பெரும் சுமையாக இரக்கிறது. இந்த நிலையில் கேபிள் டிவிக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேபிள் டிவி சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

 கேபிள் டிவி சங்கத்தின் கோரிக்கை

இந்தியாவில் உள்ள டிஜிட்டல் கேபிள் ஆபரேட்டர்களின் மிகப்பெரிய அமைப்பான அகில இந்திய டிஜிட்டல் கேபிள் கூட்டமைப்பு மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், நாட்டில் கேபிள் டிவி துறை மிகப்பெரிய சேவை நிறுவனமாகும். இந்தத் துறையின் கீழ் நேரடியாக ஒரு மில்லியன் மக்கள் வேலை பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய 18% ஜிஎஸ்டி விகிதம் மிக அதிகமாக உள்ளது. இது நுகர்வோரின் வரிச்சுமையை அதிகரிக்கிறது. அதிகரித்து வரும் செலவுகள், சேட்டிலைட் சேனல்களின் விலை உயர்வு மற்றும் ஓடிடி போன்ற டிஜிட்டல் தளங்களிலிருந்து அதிகரித்து வரும் போட்டி ஆகியவை இந்தத் துறையை நிதி நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளன. இந்த நெருக்கடியைக் குறைக்க, ஜிஎஸ்டி விகிதத்தை 5% ஆகக் குறைக்க வேண்டியது அவசியம்.

இதையம் படிக்க :  ஜிஎஸ்டி குறைப்பு குறித்து வரவுள்ள முக்கிய அறிவிப்பு.. டிவி, ஏசி விலை குறையுமா?

ஜிஎஸ்டி குறைப்பது வாடிக்கையாளருக்கு எவ்வாறு பயனளிக்கும்?

ஜிஎஸ்டி விகிதம் 5% ஆகக் குறைக்கப்பட்டால், முதலில் கேபிள் டிவியின் மாதாந்திர பில் கட்டணம் குறையும். மேலும் பொதுமக்கள் அதன் பலனைப் பெறுவார்கள். மறுபுறம், இது கேபிள் ஆபரேட்டர்களின் நிதி நிலையை வலுப்படுத்தும். சிறு வணிகங்களான எம்எஸ்ஓக்கள் மற்றும் உள்ளூர் ஆபரேட்டர்கள் டிஜிட்டல் பிராட்பேண்டின் விரிவாக்கத்தில் முதலீடு செய்யவும் முடியும். தொலைதூரப் பகுதிகளுக்கு இணையம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் சென்றடைய உதவும் என்பதால் டிஜிட்டல் இந்தியா மிஷனும் இதன் மூலம் பயனடையும்.

இது தவிர,  வரி விலக்கு பெறுவதன் மூலம், மலிவான விலையில் சேவைகளை வழங்கும் டிஜிட்டல் தளங்களுடன் ஒப்பிடும்போது இந்த நடவடிக்கை கேபிள் டிவிக்கு சமமான வாய்ப்பு கிடைக்கும். இதனால் மக்கள் அதிகம் கேபிள் டிவி சேவையை பயன்படுத்துவர் என்பதால்  வருங்காலங்களில் வருவாய் அதிகரிக்கும்.

இதையும் படிக்க : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!

கேபிள் டிவி என்பது வெறும் பொழுதுபோக்குக்கான கருவி மட்டுமல்ல, இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைப்பதற்கும் கல்வி மற்றும் தகவல்களை வழங்குவதற்கும் பாலமாக செயல்படுகிறது. எனவே ஜிஎஸ்டி குறைப்பு நுகர்வோரின் சுமையைக் குறைப்பது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.