வந்தாச்சு 9 காரட் தங்கம்.. ஒரு சவரன் வெறும் 40,000 தான்.. இனி எல்லாருமே தங்கம் வாங்கலாம்!
9 Carat Gold in India | மத்திய அரசு பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையுடன் 9 காரட் தங்கத்தை விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில், அது மிகுந்த கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில், 9 காரட் தங்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் விலை (Gold Price) வரலாறு காணாத உச்சம் அடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் தங்கம் வாங்குவதற்கான ஆர்வம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், 9 காரட் தங்கத்தை விற்பனை செய்ய இந்திய அரசு (Indian Government) அனுமதி வழங்கியுள்ளது. 22 மற்றும் 24 காரட் தங்கத்தை போலவே இந்த தங்கத்தையும் நகையாக வாங்கிக்கொள்ளலாம். தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கத்தை விடவும் இது மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 9 காரட் தங்கம் என்றால் என்ன, அதில் முதலீடு செய்வது சிறந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது 9 காரட் தங்கம்
பொதுமக்கள் மத்தியில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கத்தை வாங்கி சேமிக்கின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை காரணமாக, தங்கம் வாங்குவது குறித்து யோசிக்க கூட முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் பொதுமக்கள் மத்தியில் தங்கம் நுகர்வு 60 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்த நிலையில், தான் குறைந்த விலையில் பொதுமக்கள் தங்கத்தை வாங்க பிஐஎஸ் ஹால்மார்க்கிங் முறையின் கீழ் 9 காரட் தங்கத்தை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : தனிநபர் கடன் Vs தங்க நகை கடன்?.. இந்தியாவில் நிதி தேவைக்கு எது சிறந்தது?
9 காரட் தங்கம் என்றால் என்ன?
9 காரட் தங்கம் 18 காரட், 22 காரட் தங்கத்தை போன்றது தான். ஆனால், இந்த 9 காரட் தங்கத்தில் வெறும் 37 சதவீதம் மட்டுமே தூய தங்கம் இருக்கும். மீதம் மற்ற உலோகங்களை கொண்டிருக்கும். இதன் காரணமாக தான் இந்த 9 காரட் தங்கம் மிக குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த 9 காரட் தங்கத்தை வெறும் ரூ.40,000-க்கே வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : திருமணத்துக்காக லோன் வாங்கப்போறீங்களா? இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
9 காரட் தங்கம் வாங்குவது சிறந்ததா?
9 காரட் தங்கத்தின் தரம் மிகவும் குறைந்ததாக இருக்கும். இதன் காரணமாக அதனை நகை கடைகளிலோ அல்லது வங்கிகளிலோ அடகு வைத்து பணம் பெற முடியாது. 9 காரட் தங்கத்தில் குறைந்த அளவே தூய்மையான தங்கம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தங்கத்தின் பளபளப்பு குறைந்ததாக இருக்கும். இந்த 9 காரட் தங்கத்தில் அதிக அளவு வேறு சில உலோகங்கள் சேர்கப்பட்டுள்ள நிலையில், 9 காரட் தங்க நகைகள் விரைவில் நிறம் மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே முதலீடு செய்யும் நோக்கத்தில் இந்த 9 காரட் தங்கம் வாங்கினால் அது நிச்சயம் கை கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.