கடும் உயர்வுக்கு மத்தியில் சற்று குறைந்த தங்கம் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
MCX and IBJA Analysis | கடந்த சில மாதங்களாக தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் விலை சரிவு அடைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். தங்கம் விலை 10 கிராம் ரூ.1 லட்சம் வரை சென்றாலும் தற்போது விலை குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக உலக அளவில் தங்கம் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த வாரம் தங்கம் (Gold Price) விலை உயர்வது நின்றுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் எம்சிஎஸ்-ல் (MCX – Multi Commodity Exchange) தங்கம் விலை ரூ.1,900 வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை நிலவரம் என்னவாக உள்ளது, தற்போதைய சூழலில் தங்கம் வாங்கலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் விலை உயர்வுக்கு மத்தியில் நிம்மதி கொடுத்த தங்கம் விலை
நீங்கள் தங்கம் வாங்க நினைத்துள்ளீர்கள் என்றால் இதுதான் உங்களுக்கு சரியான நேரம். தங்கம் விலை 10 கிராம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் உயர்ந்திருந்தாலும், தற்போதைய நிலவரம் நிம்மதி அளிக்க கூடிய விதமாக உள்ளது. காரணம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளது. அதாவது எம்சிஎஸ்-ல் 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.1,900 வரை குறைந்துள்ளது. கடந்த காலங்களில் தங்கள் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தனிநபர் கடன் Vs தங்க நகை கடன்?.. இந்தியாவில் நிதி தேவைக்கு எது சிறந்தது?




எம்சிஎஸ்-ல் 10 கிராம் தங்கத்தின் விலை என்ன?
எம்சிஎஸ்-ல் தங்கம் விலை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15, 2025) தங்கம் விலை சற்று உயர்வை சந்தித்தது. ஆகஸ்ட் 08, 2025 அன்று ரூ.1,01,789 ஆக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 15, 2025 அன்று ரூ.99,850 ஆக குறைந்தது. வெறும் நான்கு நாட்கள் வர்த்தகத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.1,948 வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு காரணமாக தங்க நகை வியாபாரிகள் மத்தியில் சற்று நிம்மதி நிலவியது.
இதையும் படிங்க : GST : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!
உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை எவ்வளவு மலிவாக உள்ளது?
எம்சிஎஸ்-ல் மட்டுமன்றி உள்நாட்டு சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்தியன் புல்லியன் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA – Indian Bullion Jewelers Association) இணையதளத்தின் தரவுகளின்படி, ஆகஸ்ட் 08, 2025 அன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,01,406 ஆக இருந்தது. இதுவே, அன்றைய தினம் மாலை ரூ.1,00,942 ஆக குறைந்தது. இவ்வாறு விலை குறைவு நீடித்து வந்த நிலையில், ஆகஸ்ட் 15, 2025 அன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,00,023 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.