வரலாறு காணாத உச்சம்.. ரூ. 75,760 க்கு விற்பனையாகும் தங்கம்.. என்ன காரணம்?
Gold Rate Chennai: தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 8, 2025) புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அந்த வகையில், தங்கம் ஒரு கிராமிற்கு ரூபாய். 70 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு சவரனுக்கு ரூபாய் 760 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம், ஆகஸ்ட் 8, 2025: ஆபரண தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் ஆகஸ்ட் 8 2025 தேதியான இன்று, ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 9,470 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல் ஒரு சவரன் ரூபாய் 75 ஆயிரத்து 760 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நமது இந்திய கலாச்சாரத்தின் படி எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அதில் தங்கத்திற்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்படும். தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் பொதுமக்கள் தங்க நகை எப்போதும் வாங்குவார்கள். 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து ரூபாய் 75 ஆயிரத்து 40 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தங்க நகை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
தங்கம் விலை உயர காரணம் என்ன?
தங்கம் விலை ஏற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவில் இருக்கக்கூடிய அமெரிக்க டாலர்களை அமெரிக்கா முடக்கியதன் காரணமாக உலக வங்கியில் ரஷ்யா தங்க கட்டிகளை சேமித்து வருகிறது. அதேபோல் சீனாவும் தங்கத்தின் மீது சேமிப்பு முன்னெடுத்து வருகிறது.
மேலும் படிக்க: மாறாத ரெப்போ விகிதம் – ஹோம் லோன் பெற்றவர்களுக்கு பாதிப்பா?
உலக நாடுகள் பலவும் தங்கம் மீது முதலீடுகள் செய்து உலக வங்கியில் சேமித்து வருவதன் காரணமாக இந்த விலை ஏற்றம் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே கடுமையாக உயர்ந்து வருகிறது. அவ்வப்போது சற்று குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
புதிய உச்சத்தில் தங்கம் விலை:
கடந்த இரண்டு மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 8 2025 தேதியான இன்று, தங்கம் ஒரு கிராமிற்கு ரூபாய். 70 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு சவரனுக்கு ரூபாய் 760 அதிகரித்துள்ளது. இந்நிலையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 10,330 க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 82,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. 5.5% ஆகவே தொடரும்.. ஆர்பிஐ அறிவிப்பு!
அதே வேளையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 9,470 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூபாய் 75 ஆயிரத்து 760 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 7 2025 தேதியான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய், பவுனுக்கு ரூபாய் 160 அதிகரித்து 75 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.